குன்னூர் – மேட்டுப்பாளையம் நீலகிரி மலை ரயில் தடம் புரண்டது!

குன்னூர் – மேட்டுப்பாளையம் நீலகிரி மலை ரயில் தடம் புரண்டது!
Published on

கோடைக்காலம் என்பதால் நீலகிரி மாவட்டத்துக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்களின் ஆசை நீலகிரி மலை ரயிலில் பயணம் செய்ய வேண்டும் என்பதே. ஆனால், இந்த மலை ரயிலில் இடம் கிடைப்பது பெரும் சிரமம் என்பதே நிஜம். இந்த மலை ரயிலில் நேற்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது குடும்பத்தோடு உற்சாகமாகப் பயணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் குன்னூரிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி இன்று பிற்பகல் 3 மணியளவில் நீலகிரி மலை ரயில் புறப்பட்டது. குன்னூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அந்த ரயிலின் கடைசிப் பெட்டி தடம் புரண்டது. இதனால் தொடர்ந்து செல்ல முடியாது அந்த ரயில் அங்கே நின்றது. அதைத் தொடர்ந்து ரயில்வே ஊழியர்கள் ரயிலை சோதனை செய்தபோது, அந்த ரயிலின் கடைசிப் பெட்டியின் சக்கரங்கள் தண்டவாளத்தில் இருந்து இறங்கிவிட்டிருந்தது தெரிய வந்தது. ஆனாலும், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அதைத் தொடர்ந்து குன்னூரிலிருந்து மேட்டுப்பாளையத்துக்கான அந்த மலை ரயில் சேவை நிறுத்தப்பட்டதாக ரயில்வே துறையால் அறிவிக்கப்பட்டது.

அதிர்ஷ்டவசமான இந்த ரயில் குன்னூர் ரயில் நிலையம் அருகிலேயே பழுதாகி நின்றதால் பெரிய அசம்பாவிதங்கள் ஏதும் நிகழவில்லை. அதோடு, அந்த ரயிலில் பயணித்த 175 பயணிகளும் பத்திரமாக இறக்கி விடப்பட்டு, அங்கிருந்து சிறப்புப் பேருந்துகள் மூலம் மேட்டுப்பாளைத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். யுனேஸ்கோ அமைப்பினால்  பாராட்டுப்  பெற்ற இந்த பாரம்பரியமிக்க நீலகிரி மலை ரயில் தடம் புரண்டது, கோடை விடுமுறையை சந்தோஷமாகக் கழிக்க வந்த சுற்றுலா பயணிகளிடம் பெருத்த ஏமாற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com