கோரமண்டல் விபத்து மீட்பு பணிகள் நிறைவு - உயிர் பலி தொடர்ந்து அதிகரிப்பு!

கோரமண்டல் விபத்து மீட்பு பணிகள் நிறைவு - உயிர் பலி தொடர்ந்து அதிகரிப்பு!
Published on

கோரமண்டல் ரயில் விபத்து தொடர்பான மீட்பு பணிகள் நிறைவடைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 15 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து நடந்த மீட்பு நடவடிக்கைகள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வேயின் செய்தித் தொடர்பாளரான அமிதாப் ஷர்மா அறிவித்துள்ளார்.

நேற்று இரவு எட்டு மணி தொடங்கி இன்று காலை 11 மணி வரை மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. மீட்கப்பட்டவர்கள் கட்டாக்கில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்கள். இதுவரை 238 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்று ரயில்கள் மோதிக்கொண்டதில் 17 பெட்டிகள் உருக்குலைந்திருப்பதாக அறவிக்கப்பட்டுள்ளது.

900 பேர் வரை படுகாயத்துடன் மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறர்கள். இதில் லேசான காயத்தோடு இருப்பவர்கள், படுகாயமடைந்தவர்கள், உயிருக்கு போரடிக்கொண்டிருப்பவர்கள் என பாதிக்கப்பட்டோரின் உடல்நலனுக்கு ஏற்ப கட்டாக், புவனேஸ்வர் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள்.

இரவு பகல் பராது தொடர்ந்து நடந்த மீட்பு நடவடிக்கைகளின் காரணமாக உயிரிழப்பை குறைக்க முடிந்திருக்கிறது என்கிறார்கள். இரவு நேரம், பகல் நேரத்தில் வெப்பநிலையும் அதிகமாக இருந்த நிலையில் மீட்பு பணியில் தாமதம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் உள்ளூர் மக்களின் ஒத்துழைப்போடு துரிதமாக நடந்து முடிந்திருக்கின்றன.

பாகாநாகாவில் மீட்பு பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள ராணுவம் வரவழைக்கப்பட்டிருக்கிறது. அடுத்ததாக உருக்குலைந்து கிடக்கும் ரயில்பெட்டிகளை அகற்றும் பணி ஆரம்பமாக இருககிறது. அடுத்து வரும் இரண்டு நாட்களுக்குப் பணிகள் தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கூடுதலாக தேசிய பேரிடர் மீட்புப் படைகள் வரவிருக்கின்றன.

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 5 பேரிடர் மீட்புப் படைகளோடு மத்தியப்படைகளும் இணைந்து செயல்பட்டு வருகின்றன. விபத்து நடந்த இடத்தில் 9 தேசிய பேரிடர் மீட்பு படைகள் முகாமிட்டுள்ளன. உருக்குலைந்து அனைத்து பெட்டிகளையும் அகற்றுவதற்கான ஏற்பாடுகள் முழு மூச்சில் தொடரும் என்றும் அறிவிக்கப்ப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com