சீனாவில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புகள்! உலக நாடுகள் கட்டுப்பாடு!

சீனாவில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புகள்! உலக நாடுகள் கட்டுப்பாடு!

கொரோனா தொற்றின் ஆரம்பமாக கருதப்படும் சீனாவில் மீண்டும் தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளது. அங்கு தினமும் 9 ஆயிரம் பேர் உயிரிழப்பதாக அதிர்ச்சியானா தகவல் வெளியாகி உள்ளது.

சீன பயணிகளுக்கான புதிய கட்டுப்பாடுகளை இந்தியா, ஜப்பான், பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகள் விதித்துள்ளன. தற்போது, அமெரிக்கா மற்றும் கனடாவும் இந்த முடிவை பின்பற்ற உள்ளதாக அறிவித்துள்ளன.

சீனாவில் இருந்து வரும் சர்வதேச விமான பயணிகள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழை கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க குடிமக்கள் சீனா, ஹாங்காங் மற்றும் மக்காவ் பயணத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அமெரிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.

சீனாவின் ஊகான் நகரில் 2019 ஆம் ஆண்டு பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், உருமாற்றம் அடைந்து அடுத்தடுத்த அலைகளை உருவாக்கி உலகையே 3 ஆண்டுகளாக அச்சுறுத்தி வருகிறது. இந்த நிலையில், கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளால் கொரோனா பரவலை கட்டுக்குள் வைத்துள்ளதாக கூறி வந்த சீனாவில் கொரோனா பரவல் மீண்டும் மேலோங்கி உள்ளது.

சீனாவில் கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரையிலான நாட்களில் மட்டும் 24 கோடியே 80 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் கசிந்தது. மேலும் உயிரிழந்தவர்களின் உடல்களை சுற்றப்பட்ட நிலையில், ஓரிடத்தில் குவித்து வைக்கப்பட்டது போன்ற வீடியோக்களும் வெளிவந்து உலக நாடுகளை திடுக்கிட வைத்தது.

தற்போது கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கைகளை வெளியிடுவதை சீனா நிறுத்தியது. இதனிடையே, நாள்தோறும் 9 ஆயிரம் பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்து வருவதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதே போல், கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மத்தியில் ஜப்பானில் கொரோனா பரவல் மீண்டும் தலைதூக்கி உள்ளது. நாள் ஒன்றுக்கு 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 200க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

தைவான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளிலும் 20 ஆயிரத்துக்கும் அதிகமாக தொற்று பாதிப்பு பதிவாகி வருகிறது. ரஷ்யா, ருமேனியா, ஆஸ்திரேலியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com