தமிழகத்தில் கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்! மருத்துவ கல்வி இயக்குநரகம் அறிவுரை!

தமிழகத்தில் கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்! மருத்துவ கல்வி இயக்குநரகம் அறிவுரை!

சீனாவில் ஒமைக்ரானின் மாறுபாடான பி.எப்.7 என்ற வைரசால் தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் சீனாவில் அனைத்து மருத்துவமனைகளும் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. அதே போல உயிரிழப்புகளும் அதிகமாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சீனாவில் ஒரே நாளில் 50 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் சுகாதாரத்துறை உலகெங்கும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள படுவது குறித்து ஆலோசனைகள் செய்து வருகிறது.

கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், தமிழக மருத்துவமனைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

இது குறித்து மருத்துவ கல்வி இயக்குநரகமும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது .

 • அடுத்த ஆறு மாதங்களுக்கு அரசு மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை செய்யவும், உரிய சிகிச்சை அளிக்கவும் தேவையான அனைத்து மருத்துவ உபகரணங்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும்.

 • இதற்காக, மாதிரி சோதனைக் கருவிகளை முன்கூட்டியே வாங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க பட வேண்டும்.

 • ஆக்சிஜன் செறிவூட்டிகளை உயிரியல் மருத்துவ பொறியாளர்கள் மூலம் சரி செய்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

 • பயன்படுத்தப்படாத ஆக்சிஜன் சிலிண்டர்களை பாதுகாப்பான இடத்தில் சேமித்து வைக்கவும், அவசரக்கால பயன்பாட்டிற்கு தயாராக வைத்திருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

 • என்.95 முகக்கவசம், பிபிஇ கிட் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களையும், மருந்துகளையும் தயார் நிலையில் வைக்க வேண்டும் .

 • மருத்துவமனைகளில் நோயாளிகள் மற்றும் உடன் இருப்பவர்கள் முகக்கவசம் அணிவது உட்பட கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

 • மருத்துவமனை வளாகத்தில் மக்கள் கூடுவதை தவிர்க்கவும், கொரோனா தடுப்பூசி மையம் போதிய மருத்துவ பணியாளர்களுடன் தயாராக இருக்க வேண்டும்.

 • கொரோனா வார்டுகளில் கூடுதலாக படுக்கைகளை இருப்பு வைக்கவும் மருத்துவ கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

 • ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யும் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

 • தொற்று பாதிப்பு குறித்து உடனடியாக முடிவை தெரிவிக்கவும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com