கொரோனா தடுப்பு ஒத்திகை - மத்திய அரசின் அதிரடி உத்தரவு; மாநிலத்தின் அரசு, தனியார் மருத்துவமனைகள் பங்கேற்பு!

கொரோனா தடுப்பு ஒத்திகை - மத்திய அரசின் அதிரடி உத்தரவு; மாநிலத்தின் அரசு, தனியார் மருத்துவமனைகள் பங்கேற்பு!
Published on

கொரோனா பரவல் தடுப்புக்கான ஒத்திகை நேற்று முதல் நாடு முழுவதும் ஆரம்பமாகியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து, மாநில அரசுகள் ஒத்திகையை இரண்டாவது நாளாக தொடர்கின்றன. நேற்று தொடங்கிய ஒத்திகை இன்றும் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்ப சுகாதார மையங்கள் தொடங்கி, சிறப்பு சிகிச்சை மருத்துவமனைகள் வரை அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளும் ஒத்திகையில் பங்கேற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கொரோனா ஐ.சி.யு படுக்கை வசதிகள், ஆக்ஸிஜன் சிலிண்டர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட மருத்துவமனை கட்டமைப்புகளை ஆய்வு செய்யும் பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன.

கடந்த வெள்ளிக்கிழமை டெல்லியில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் மாண்டவியா உள்ளிட்டவர்களோடு மத்திய அரசின் சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டார்கள். இதில் எடுக்கப்பட்ட முடிவின் படி, நாடு முழுவதுமுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை தொடர்பாக ஒத்திகை நடத்திட முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்திற்கு பின்னர், மாநில அரசுகளை தொடர்பு கொண்ட மத்திய அரசின் சுகாதாரத்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்த். அதன் படி ஒவ்வொரு மாநிலமும் மாவட்ட அளவில் கொரோனா தடுப்பு குறித்த ஆய்வுகளை நடத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

அவசர சிகிச்சை மையங்கள், இன்ப்ளூயன்ஸா பரவல், சார்ஸ் தொற்று போன்றவற்றை கண்காணிக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை தன்னுடைய உத்தரவில் தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். மருத்துவக் கட்டமைப்புகளை பலப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஒத்திகையோடு நின்றுவிடாமல் அமைச்சர்களும் அதிகாரிகளும் அதிரடி விசிட் நடத்தவும் முடிவு செய்திருக்கிறார்கள். மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சூக் மாண்டவியா, ஏஐஐஎம்ஸ் உள்ளிட்ட மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொள்ள இருககிறார். தமிழ்நாட்டிலும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் பல்வேறு மருத்துவமனைகளில் நேரடியாக சென்று கொரோனாவுக்கான ஒத்திகை பணிகளை பார்வையிட இருக்கிறார்.

மாவட்ட அளவில் நடைபெறும் ஒத்திகையை, சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் முன்னிலையில் இருந்து நடத்தி வருகிறார்கள். நேற்று கிருஷ்ணகிரி அரசு மருத்துவனையில் கொரோனா தடுப்பு ஒத்திகை பணிகள் நடைபெற்றன. ஆக்சிஜன்

சிலிண்டர் இருப்பு, கொரோனா வார்டு இருக்கைகள், கொரோனா பரிசோதனை கருவிகளின் செயல்பாடுகளையும் ஆட்சியர் ஹபார்வையிட்டார். கொரோனா சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை கேட்டறிந்தவர், வார்டுகளை தயார் நிலையில் வைத்திருக்குமாறு அறிவுறுத்தினார்.

இந்நிலையில் தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 386 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 2,099 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருவதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்திருக்கிறது.

கடந்த வாரம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் ஒருவர் பலியானதை தொடர்ந்து பலி எண்ணிக்கை 38,051 ஆக உயர்ந்துள்ளது. இனி வரும் காலங்களில் கொரோனா எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com