சட்டப்பேரவையில் ஓபிஎஸ்ஸின் கொரோனா கேள்வியும்; மா.சு.வின் சுவாரசிய பதிலும்!

சட்டப்பேரவையில் ஓபிஎஸ்ஸின் கொரோனா கேள்வியும்; மா.சு.வின் சுவாரசிய பதிலும்!
Published on

மிழ்நாடு சட்டப்பேரவையில் சென்ற மார்ச் 20ம் தேதி பொது பட்ஜெட்டும், 21ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டன. இந்த பட்ஜெட் மீதான விவாதங்கள் நடந்து முடிந்து உறுப்பினர்களின் கேள்விகளுக்கு நிதி மற்றும் மனித வள மேலாண்மை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் ஆகியோர் பதிலளித்துப் பேசினர்.

அதைத் தொடர்ந்து, இன்று காலை கேள்வி நேரத்தின்போது முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ‘கடந்த கொரோனா தொற்றுக் காலத்தில் தொண்டுள்ளத்தோடு மருத்துவப் பணி செய்த மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் உணவு வழங்கிய ரெஸ்டாரண்டுகளுக்கு இன்னும் உரிய பணம் தரவில்லை என்ற செய்தி என்னிடம் தரப்பட்டுள்ளது. இது குறித்து அமைச்சரின் பதிலை அறிய விரும்புகிறேன்‘ எனக் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ‘ஏற்கெனவே சட்டமன்றத்தில் இது பற்றி விவாதித்துள்ளோம். நியாயமான கட்டணத்தில் நியாயமான உணவை வழங்கிய நியாயமான பில்களை செட்டில் செய்து விட்டோம். அநியாயமான முறையில் ஓட்டலே இல்லாமல் உணவு கொடுத்ததாகச் சொல்லப்பட்டவர்களுக்குத்தான் பில்கள் செட்டில் செய்யாமல் வைத்துள்ளோம். (அப்போது அவையில் பெரிதாக சிலைப்பலை எழுந்தது) அதுவும் கூட ஆய்வு செய்யப்பட்டுள்ளது. உண்மையிலேயே உணவு வழங்கி இருந்தால் அதற்காக பில் நிச்சயமாக செட்டில் செய்யப்படும்’ என்று கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com