இனி புதன்கிழமைகளில் கொரோனா தடுப்பூசி முகாம்

இனி புதன்கிழமைகளில் கொரோனா தடுப்பூசி முகாம்
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

மிழகத்தில் கொரோனா அதிகரித்து வரும் இந்த நேரத்தில் தடுப்பூசிகள் போடுவதில் துரிதம் காட்டி வருகிறது மாநகராட்சி. அதே நேரத்தில் முகக்கவசம் உள்ளிட்ட கொரோனா கால வழிமுறைகளையும் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.

அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த ஞாயிற்றுக்கிழமைகளில் தடுப்பூசி போடப்பட்டு வந்தது. இனி இந்த தடுப்பூசி முகாம்கள் புதன்கிழமை நடைபெறும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

அறுபது வயதிற்கு மேல் உள்ள மூத்த குடிமக்கள் அனைவருக்கும் மூன்றாவது தவணை தடுப்பூசி போடுவதில் முனைப்பு காட்டி வருகிறது மாநகராட்சி என கருத்து தெரிவித்துள்ளார் அமைச்சர் மா. சுப்ரமணியன்.

பண்டிகைகள் அதிகம் வரும் காலகட்டத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்த கொரானா கால வழிமுறைகள் மற்றும் நடைமுறைகளை பின்பற்றுவது அவசியமாகிறது.

logo
Kalki Online
kalkionline.com