பருவமழையை எதிர்கொள்ள மாநகராட்சி ஆயத்தம்!

 மின் மோட்டார்
மின் மோட்டார்
Published on

வடகிழக்கு பருவமழையை வரத் துவங்கியுள்ள நிலையில், அதனை எதிர்கொள்வதற்கான ஆயத்த பணிகளை மாநகராட்சி மேற்கொள்ள தொடங்கியுள்ளது. தற்போது சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் சில பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அங்கங்கே தண்ணீர் தேங்கி பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

அதிக கனமழை காரணமாக, வெள்ள பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க, எல்லா சுரங்கப்பாதைகளில் தலா இரண்டு மின் மோட்டார்கள் அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

மழைநீர்
மழைநீர்

தாழ்வான இடங்கள், குடிசைவாழ் பகுதிகள் உள்ளிட்ட இடங்கள் என, மொத்தம் 700 இடங்களில் ராட்சத மின் மோட்டார்கள் அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதே போன்று முன்னெச்சரிச்கை நடவடிக்கைகளாக, நீர்நிலைகளை சீரமைக்கும் பணிகளும் வேகப்படுத்தப்பட்டுஉள்ளன. வேளச்சேரி கால்வாய், ஆதம்பாக்கம் குளம் உள்ளிட்டவற்றில் உள்ள வண்டல்கள், ஆகாய தாமரைகள் அகற்றப்பட்டு கொடுங்கையூர், பெருங்குடி குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்படுகின்றன.

பருவமழை எதிர்கொள்வதற்கான பணிகளை, கவுன்சிலர்களுடன் இணைந்து மேற் கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது தாழ்வான 400 இடங்களில் மின் மோட்டார்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. தவிர, மழை நீர் வடிகால் பணிகள் முடியாத இடங்களில், அந்தந்த ஒப்பந்ததாரர்கள் வாயிலாக மின் மோட்டார்கள் அமைக்கப்படுகின்றன. இதுதவிர, கூடுதலாக 300 மோட்டார்கள் மாநகராட்சி சார்பில் அமைக்கப்படும். சமூக நலக்கூடம், பள்ளிகள் போன்றவை நிவாரண முகாம்களாக பயன்படுத்த தயார் நிலையில் உள்ளன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com