நடப்பாண்டில் இந்தியர்கள் அதிகம் சுற்றுலா சென்ற நாடாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் கருதப்படுகிறது.
துபாய் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள நகரமாகும். உலகின் மிகப்பெரிய வர்த்தக நகரமாக தற்போது மாறியுள்ளது. மேலும் மிகக் குறுகிய காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை கண்ட நகரமும் துபாய் தான். அரேபிய நாகரீகத்தை கொண்ட துபாய், தற்போது மேற்கத்திய கலாச்சார நகரமாக மாறி இருக்கிறது.
உலகில் மிகப்பெரிய கோடீஸ்வரர்கள் பலரும் தங்களுக்கான நகரமாக துபாயை கருதி துபாயில் குடியேறி வருகின்றனர். மேலும் உலகின் மிகப்பெரிய ஆடம்பர நகரமாகவும் துபாய் திகழ்கிறது. முக்கிய பொழுதுபோக்கு நகரமாகும் தற்போது மாறி இருக்கிறது துபாய். இதனால் துபாயை நோக்கி படையெடுக்கும் மக்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் கணிசமாக உயர்ந்து வருகிறது.
குறிப்பாக இந்தியாவிலிருந்து வேலைக்காகவும் மற்றும் சுற்றுலாவிற்காகவும் லட்சக்கணக்கான மக்கள் ஒவ்வொரு ஆண்டும் பயணிப்பதாகவும், நடப்பு ஆண்டில் இந்தியர்கள் அதிகம் பயணித்த நாடக துபாயே இருப்பதாகவும் ஸ்கை ஸ்கேனர் என்ற நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. துபாயினுடைய தற்போதைய மக்கள் தொகையில் 5 சதவீதம் பேர் இந்தியர்களாக இருப்பதாகவும், இதில் பலர் வேலைக்காக துபாயில் தங்கி இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இது மட்டுமல்லாது இந்தியாவின் முக்கிய பிரபலங்கள், கோடீஸ்வரர்கள் பலரும் துபாயில் தங்களுக்கென்று சொந்தமாக வீடு அமைத்துள்ளனர். இதற்கு காரணம் துபாயினுடைய வர்த்தக மற்றும் பொழுதுபோக்கு துறையின் விரிவாக்கம் என்று சொல்லப்படுகிறது.