பாதிரியாருக்கு பதிலாக ChatGPT-ஐப் பயன்படுத்தி திருமணம் செய்துகொண்ட தம்பதிகள்.

பாதிரியாருக்கு பதிலாக  ChatGPT-ஐப் பயன்படுத்தி திருமணம் செய்துகொண்ட தம்பதிகள்.

மெரிக்காவிலுள்ள கொலராடோ மாகாணத்தைச் சேர்ந்த தம்பதிகள், தங்கள் திருமணத்தை வித்தியாசமான முறையில் பாதிரியாரின் துணையின்றி ChatGPT-ஐப் பயன்படுத்தி நடத்தியுள்ளனர். 

ஒரு திருமணம் அதிநவீன தொழில்நுட்பத்துடன் பாரம்பரியம் கலந்து நடத்தப்பட்டால் எப்படி இருக்கும்? அப்படிப்பட்ட திருமணம் தான் அமெரிக்காவில், 1800 களில் கட்டப்பட்ட ஓர் வரலாற்று தேவாலயத்தில், பாதிரியாரின் துணையின்றி ரோபோவைப் பயன்படுத்தி நடத்தப் பட்டுள்ளது. அந்த ரோபோ என்ன பேச வேண்டும் என்பதற்கான உள்ளீடை ChatGPT பயன்படுத்தி உருவாக்கியுள்ளனர். 

Reece Wiench மற்றும் Deyton Truitt தம்பதியினர் கடந்த வார இறுதியில், இப்படிப்பட்ட ஒரு வித்தியாசமான திருமணத்தை செய்து கொண்டனர். இதற்கு இரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் ஒப்புக்கொண்டதால், இவர்களின் திருமணம் பாதிரியார் முன்னிலையில் அல்லாமல் நடத்துவதற்கு தேவாலயத்தால் அனுமதி கொடுக்கப்பட்டது. இந்த முடிவானது திருமணம் செய்வதற்கு கடைசி நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு என கூறப்படுகிறது. ஏனென்றால் Ai தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினால் எளிதாகவும் இருக்கும், செலவையும் குறைக்கலாம் என அவர்கள் நம்பினர். 

இந்த புதுமையான யோசனையை கொடுத்தவர் மணமகளின் தந்தையான ஸ்டீபன் வின்ச். இதுகுறித்து அவர் கூறியதாவது, "தொடக்கத்தில் இப்படிப்பட்ட ஓர் திருமணத்தை நடத்த Ai பாட் ஒப்புக்கொள்ளவில்லை. என்னால் முடியாது, எனக்கு கண்கள் இல்லை, எனக்கு உடல் இல்லை, என்னால் இந்தத் திருமணத்தை நடத்த முடியாது" எனக் கூறியதாக அவர் தெரிவித்தார். பின்னர் விடாமுயற்சியுடன் AI பாட்டை தயார் செய்வதற்கு ChatGPT பயன்படுத்தியதில் அவர் வெற்றி கண்டார். அந்த ரோபோ அவர்களின் திருமணத்தை நடத்த ஒப்புக் கொள்வதற்கு தேவையான தகவலை தம்பதிகள் கொடுத்த பிறகே சம்மதம் தெரிவித்தது. 

பாதிரியார் பேசுவது போலவே பேசுவதற்கும், அவர் தலையில் கை வைத்து தொடுவது போலவே அந்த ரோபோ செய்வதற்கும் ChatGPT பயன்படுத்தியே தகவல்கள் கொடுக்கப்பட்டது. மேலும் திருமணத்தின் போது ரோபோ என்ன பேச வேண்டும் என்பதற்கான ஸ்கிரிப்டும் கொடுக்கப்பட்டது. இறுதியில், 30 விருந்தினர்கள் குழுமியிருந்த தேவாலயத்தில், ஒரு Ai தொழில்நுட்ப ரோபோ திருமணத்தை வெற்றிகரமாக நடத்தி வைத்தது. 

இந்தத் தம்பதியினர் டிஜிட்டல் முறையில் இப்படிப்பட்ட வித்தியாசமான திருமணத்தை செய்வதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஏனென்றால், இவர்கள் இருவருமே ஆன்லைன் டேட்டிங் செயலி மூலமாகவே காதல் வயப்பட்டு, ஒன்றாக இணைந்துள்ளனர். தற்போது அவர்களின் திருமணம் வரலாற்றில் இடம் பெற்றுவிட்டது. மேலும், ChatGPT ஆல் பறிக்கப்படும் வேலைப் பட்டியலில், திருமணம் செய்து வைக்கும் பாதிரியாரின் பணியும் சேர்ந்துவிட்டது. 

இனிவரும் காலங்களில் இந்தத் தொழில்நுட்பத்தால் எதுபோன்ற மாற்றங்களை எல்லாம் பார்க்கப் போகிறோமோ தெரியவில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com