
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அங்கு மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிய புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
இலங்கை ராணுவம் 72-ஆம் ஆண்டை நிறைவு செய்ததையொட்டி, அநுராதபுரம் கஜபா ரெஜிமென்ட் தலைமையகத்தில் சிறப்பு விழா அக்டோபர் 10-ம் தேதி நடந்தது. இந்த விழாவில் கலந்துகொண்டு அந்நாட்டு அதிபர் ராஜபக்சே, அங்கு கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்தார். அதன்பின்பு, அந்த மைதானத்தில் கிரிக்கெட் விளையாடினார். அப்போது, இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் திஸாரா பெரேரா வீசிய பந்தை அதிபர் அடித்து விளையாடிட புகைப்படம் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.