புதுச்சேரியில் பெய்த கனமழையால் பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி வீணானதால் விவசாயி பலரும் கவலையடைந்துள்ளார். புதுச்சேரியில் கடந்த ஒரு வாரமாகவே கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது.
புதுச்சேரியை அடுத்த நல்லாத்தூர் கிராமத்தில் விவசாயி ஒருவர் தனக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலங்களில் பயிர் செய்து வருகின்றார். இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பாக பெய்த கோடை மழையின் காரணமாக இரண்டு ஏக்கர் நிலத்தில் பயிரிட்டிருந்த மரவள்ளி கிழங்கு பயிர் முழுவதும் நாசமாகியது . பயிரிட்ட நிலத்தில் தண்ணீர் முழுவதும் நிரம்பியதால் பயிர்கள் மூழ்கி முற்றிலும் சேதமானது இதனால் விவசாயி மிகுந்த வேதனை அடைந்தார். அதைத் தொடர்ந்து, வயல்களில் தண்ணீர் வடிந்ததும் பயிருக்கு உரம், பூச்சி மருந்து தெளித்து விவசாயிகள் ஒரளவுக்குப் பயிர்களை மீண்டும் காப்பாற்றி வந்தனர்.
கடன் வாங்கி பயிரிட்டு மூன்றரை மாதங்கள் ஆகும் நிலையில், அந்த மரவள்ளிக்கிழங்கு பயிரிடப்பட்ட நிலத்தில் தண்ணீர் முழுவதும் மூழ்கி பயிர் சேதமானதால் விவசாயி வாங்கிய கடனை அடைக்க முடியாமல் அவதிப்பட்ட நிலையில் அரசு அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் அதை பொருட்படுத்தாமல் அலட்சியப்படுத்தி வருகின்றனர். இதனால், விவசாயி வாழ்வாதாரத்தை எடுத்துச் செல்ல வழியின்றி தவித்து வருவதாக கூறினார்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயத் துறையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அவருடைய நிலத்தை பார்வையிட்டு அவருக்கு மாற்று வழி செய்யுமாறு விவசாயம் செய்வதற்கு விவசாயத் துறை மூலமாக உதவுமாறு கோரிக்கை வைத்துள்ளார். இந்த மழையினால் புதுச்சேரியில் பல இடங்களில் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், கடந்த சில தினங்களாகப் பெய்துவரும் கனமழை விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியிருக்கிறது.