கச்சா எண்ணெய் வர்த்தகம் : மக்களுக்கு சுமை, தனியார் நிறுவனங்களுக்கு லாபம்!

கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய்Editor 1

வுதி, ஈராக், ஐக்கிய அரபு அமீரகம், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி கச்சா எண்ணெய் இந்தியாவினுடைய பெரும்பான்மையான எண்ணெய் தேவைகளை பூர்த்தி செய்கிறது. குறிப்பாக இந்தியாவுடைய போக்குவரத்திற்கு பெட்ரோல், டீசல் போன்றவைகளே பிரதான எரிபொருளாக உள்ளது.

மேலும் எல்லாத் துறைகளிலும் போக்குவரத்து ஒரு அங்கம் என்பதால் பெட்ரோல், டீசல் விலை உயர்வு அனைத்து பொருட்களின் விலை உயர்வுக்கும் அடித்தளம் இடுகிறது.  அதேநேரம் இந்தியாவினுடைய மக்கள் தொகை மற்றும் பயன்பாட்டை கருதி கச்சா எண்ணெய்   இறக்குமதி மற்றும் அது தொடர்பான வர்த்தகத்திற்கு இந்தியா அதிக முக்கிய அளித்து வருவது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டு ரஷ்யா உக்ரைன் இடையே ஏற்பட்ட போரின் காரணமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்தன. மேலும் ரஷ்யாவிடம் இருந்து மற்ற நாடுகள் பொருட்களை வாங்கவோ விற்கவும் கூடாது என்ற நிலையை உலக சந்தையில் ஏற்படுத்தினர்.

இதைத் தொடர்ந்து ரஷ்யா தங்கள் நாட்டில் அதிகம் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய், பாமாயில் போன்ற பல்வேறு வகையான பொருட்களை குறைந்த விலையில் விற்க வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாகியுள்ளது. மேலும் பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களும் பெருமளவில் குறைந்ததால் இறக்குமதி செய்ய தயாராக உள்ள ஒரு சில நாடுகளில் இருந்து கூடுதலான அளவில்  இறக்குமதி செய்வதற்கும் ரஷ்ய ஆர்வம் காட்டி வருகிறது.

பேரலுக்கு 75 டாலராக குறைந்த கச்சா எண்ணெய்

இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டு தொடங்கிய போருக்கு பிறகான இந்தியா மற்றும் ரஷ்யா இடையான வர்த்தக உறவு மேம்பட்டிருக்கிறது. மேலும் கச்சா எண்ணெயை முன்பு இருந்ததைவிட 40 மடங்கு கூடுதலாக ரஷ்யாவிடம் இருந்து இந்தியா வாங்குகிறது. மேலும் போர் தொடங்குவதற்கு முன்பு ஒரு பேரல் கச்சா எண்ணெய் 112 ரூபாய்க்கு இந்தியா வாங்கியது. போருக்கு பிறகு  ரஷ்யாவிடமிருந்து ஒரு பேர்ல் கச்சா எண்ணெயை 75 டாலருக்கு வாங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் 37 டாலர் இந்தியாவிற்கு மீதம்  ஏற்படுகிறது.

மேலும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை ரூபாயைக் கொண்ட பண பரிவர்த்தனையை ரஷ்யாவுடன் இந்தியா மேற்கொண்டு வந்தது. இந்த நிலையில் ரஷ்யாவிற்கு தேவையான பெரும்பான்மையான பொருட்கள் இந்தியாவிடம் இல்லை என்பதால் தற்போது ரூபாயைக் கொண்ட பரிவர்த்தனை நிறுத்தப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் ரஷ்யாவிடமிருந்து வாங்கும் கச்சா எண்ணெயைக் கொண்டு இந்தியா அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மிகப்பெரிய லாபத்தை சம்பாதித்து வருகின்றன.

அதே நேரம் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 112 டாலருக்கு வாங்கிய போது இருந்த பெட்ரோல் விலை கூடுதலாகி 103 ரூபாய் வரையும், டீசல் விலை 94 ரூபாய் வரையும் உயர்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஏழை எளிய மக்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் தடைபடுகின்றது. அதே சமயம் குறைந்த விலையில் கச்சா எண்ணெயை வாங்கும் நேரத்திலாவது எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை குறைத்தால் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகளை சிறிதளவு கட்டுக்குள் கொண்டு வர முடியும். ஏனைய பொருட்கள் மீதான விலையும் குறைய கூடிய வாய்ப்பு ஏற்படும். தற்போது எண்ணெய் நிறுவனங்ளே பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை விலையை நிர்ணையித்துவருகிறது. இதனால் தனியார் நிறுவனங்கள் மனது வைத்தால்தான் பெட்ரோல் டீசல் விலை குறையும் என்ற நிலை உருவாகியுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு பெட்ரோல் டீசல் விற்பனை விலையை நிர்ணையிப்பது அரசின் காட்டுப்பாட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெயை இந்தியாவின் அரசு நிறுவனம் மட்டுமல்லாது இதன் பாதியை ரிலையன்ஸ் மற்றும் நயாரா எனர்ஜி நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ரிலையன்ஸ் கடந்த நிதியாண்டில் 44 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் லாபம் ஈட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது. குறைந்த விலையில் கச்சா எண்ணெயை வாங்கும் நேரத்தில் பெட்ரோல் டீசல் விலைகளை குறைத்து தற்போது ஏற்பட்டு இருக்க கூடிய காய்கறி விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com