அழையா விருந்தாளியாக சென்ற மாணவருக்கு திருமண விழாவில் நேர்ந்த கொடுமை

அழையா விருந்தாளியாக சென்ற மாணவருக்கு திருமண விழாவில் நேர்ந்த கொடுமை

திருமண விழா ஒன்றில் அழைக்கபடா விருந்தாளியாக எம்.பி.ஏ. மாணவர் ஒரு சென்று உணவுகளை உண்டதையடுத்து பெரும் சிக்கலில் மாட்டிக்கொண்டார்.

பொதுவாக திருமண விழாக்களில் அழைக்கப்படா விருந்தாளிகளாக கலந்துகொண்டு ஜோராக சாப்பிட்டுவிட்டு வருவது போன்ற காட்சிகள் சினிமாவில் காமெடி காட்சிகளாக இடம்பெற்றிறருக்கும்.

அந்தவகையில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் நடித்த 'நண்பன்' படத்திலும் இதுபோல் காட்சி இடம்பெற்றிருக்கும். ஆனால், நிஜ வாழ்க்கையில் அழைக்கப்படா விருந்தினர்கள் கலந்துகொள்வது என்பது அரிதாகவே வரவேற்கப்படுகிறது.

அந்தவகையில், ஜபல்பூரைச் சேர்ந்த எம்.பி.ஏ. மாணவர் ஒருவர், அழைக்கபடா விருந்தாளியாக ஒரு திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு அங்குள்ள விலை உயர்ந்த உணவுகளை உண்டு உள்ளார். இதைக் கண்டுகொண்ட அங்கிருந்தவர்கள், உடனே அவரை அடித்து உதைத்துத் தள்ளியுள்ளனர். அத்தோடு விடாமல், பிடிபட்ட மாணவரை பாத்திரங்கள் கழுவவும் வைத்து உள்ளனர்.

இச்சம்பவம் போபாலில் நடந்துள்ளதையடுத்து, அந்த எம்.பி.ஏ. மாணவர் பாத்திரம் கழுவும் படியான வீடியாே, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

இதற்கு முன்னதாக இதே போன்று ஒரு திருமணவிழாவில் அழையா விருந்தாளியாக ஒரு மாணவர் சென்றபோது, அவர் மணமகனிடம், தனக்கு உங்கள் பெயர் தெரியாது என்றும், தனக்கு பசிக்கிறது. அதனால் இங்கு சாப்பிட வந்தேன் என்றும், இதனால் உங்களுக்கு ஏதும் பிரச்சினையா என்றும் நேர்மையாகக் கேட்டுள்ளார்.

இதைக்கேட்ட அந்த மணமகன், ஒரு பிரச்சினையும் இல்லை. நீயும் சாப்பிட்டுவிட்டு, உன் ஹாஸ்டலுக்கும் சிறிது சாப்பாடு எடுத்துக்கொள் எனவும் பணிவாக கூறியுள்ளார். இந்த வீடியோவை ஐஏஎஸ் அதிகாரி அவனிஷ் சரண் வெளியிட்டு உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com