கியூபா நாடே இருளில் மூழ்கியது… போராட்டத்தில் இறங்கிய மக்கள்!

cuba
cuba
Published on

கியூபா நாட்டில் நாடு முழுவதும் ஏற்பட்டுவரும் மின்வெட்டுகளை கண்டித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கியூபாவில் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அந்த நாட்டில் பொருளாதார சரிவு போன்ற பல்வேறு காரணங்களால் கடந்த சில நாட்களாகவே அனைத்துப் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. எரிபொருள், தண்ணீர் மற்றும் மருந்து பற்றாக்குறையால் கியூபா நாட்டு மக்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டு இருந்தனர். அந்தவகையில் தற்போது மின்தடையும் ஏற்பட்டுள்ளது. இது அவர்களின் வாழ்வாதாரத்தை மேலும் சிக்கலாக்கி உள்ளது. அந்தவகையில் அந்த நாட்டின் மிகப்பெரிய மின் நிலையத்தில் பழுது ஏற்பட்டதால், நாடு முழுவதும் மின்வெட்டு ஏற்பட்டது.

அப்போது சில மக்களுக்கு விறகு அடுப்புகளால் சமைக்கும் நிலை வந்தது. சுமார் நான்கு நாட்கள் மின்சாரம் இல்லாததால் ரொட்டி போன்ற பொருட்களை வாங்க மக்கள் வரிசையில் நின்று வாங்கும் சூழல் ஏற்பட்டது. ஒருவழியாக சரி செய்தப் பின்னர் மீண்டும் 24 மணி நேரத்தில் பழுதாகியுள்ளது. இதனால் நாட்டு மக்கள் இருளில் மூழ்கினர். இதன் காரணமாக நாட்டு மக்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடு முழுதும் செயற்பட்டு வந்த மின் உற்பத்தி நிலையங்கள் தங்கள் உற்பத்தியை நிறுத்தியதை அடுத்து, நாடு முழுதும் மின்சாரம் தடைப்பட்டது.

கடந்த 2022ம் ஆண்டு சூறாவளி மற்றும் நிலச்சரிவினால் இதுபோன்ற மின்தடை ஏற்பட்டது. அதற்கு பின்னர் இப்போதுதான் இந்த அளவுக்கு மோசமான மின்தடை ஏற்பட்டிருப்பதாக மக்கள் கூறுகின்றனர்.

சமீபத்தில் வீசிய மில்டன் சூறாவளி காரணமாக குட்டோரஸ் மின் உற்பத்தி நிலையம் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. மின்சாரம் தடைபட்டதால், போக்குவரத்து சேவை அடியோடு பாதிக்கப்பட்டது.

கடைகள், வணிக நிறுவனங்கள், ஹோட்டல்கள் உள்ளிட்டவை செயலிழந்தன. முக்கிய சாலைகள் வெறிச்சோடின. இணையதள சேவையும் பாதிக்கப்பட்டதால், கியூபா மக்கள் செய்வதறியாது அதிர்ச்சியில் உறைந்தனர். இதனால நாட்டு மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

இதையும் படியுங்கள்:
ஸ்டாலின் சிறந்தவர், ஆனால் உதயநிதி தலைவர்களை அவமானப்படுத்துகிறார்! – பாஜக அறிக்கை!
cuba

அமெரிக்காவின் வர்த்தக தடை, ஆலைகளை இயக்குவதற்கான எரிபொருள் மற்றும் உதிரி பாகங்களை பெறுவதில் உள்ள சிக்கல் போன்றவை உற்பத்தி பாதிப்புக்கு காரணம் என, கியூபா அரசு குற்றம்சாட்டியுள்ளது.

பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளன. இரவில் செயல்படும் கேளிக்கை விடுதிகள் உள்ளிட்ட கலாச்சார மையங்களை மூட, அரசு உத்தரவிட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com