CUET தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

CUET தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on: 



மத்திய பல்கலைகழகங்களில் இளங்கலைப் படிப்புகளில் சேருவதற்கான பொதுப்பல்கலைகழக நுழைவுத்தேர்வு (CUET) , அதற்கான தேர்வு முடிவுகள் இன்றிரவு 10 மணிக்கு வெளியாகிறது.

இந்த வருடத்திற்கான CUET - UG 2022 படிப்புகளுக்கான தேர்வுகள் கடந்த ஆகஸ்ட் மாதம் நாடு முழுவதும் சுமார் 500 நகரங்களில் நடைபெற்றது. தேசிய தேர்வுகள் முகமை  இந்த நுழைவுத்தேர்வினை கணிணி வழியாக நடத்திவருகிறது.

தமிழ் மற்றும் இந்தி உட்பட ஏறக்குறைய 13 மொழிகளில் இத்தேர்வு நடைபெற்றது. நாடுமுழுவதும் 60 சதவீதத்திற்கும் அதிகமான மாணவர்கள் இத்தேர்வினை எழுதியிருந்தனர். கடந்த மாதம் நடந்து முடிந்த இத்தேர்வுக்கான முடிவுகள் இன்றிரவு 10 மணிக்கு வெளியாகின்றது.

logo
Kalki Online
kalkionline.com