தேசிய தேர்வு முகமை (NTA) நடத்தும் மத்திய பல்கலைகழகங்களின் CUET முதுநிலை படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. கடந்த செப் 1 ஆம் தேதியிலிருந்து செப் 12 தேதிவரை PG மாணவர்களுக்கான CUET பொது நுழைவு தேர்வு நடைபெற்றது.
இந்த தேர்வில் நாடு முழுவதிலிருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் மாணவர்கள் 1.8 லட்சம் பேரும் மாணவிகள் 1.7 லட்சம் பேரும் இத்தேர்வினை ஆன்லைன் மூலமாக எழுதியுள்ளனர். இத்தேர்வுகள் ஆன்லைன் மூலமாக காலை, மதியம் என இரு ஷிப்டுகளாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று இந்த CUET PG தேர்வு முடிவுகள் cuet.nta.nic.in என்ற அதிகாரபூர்வ இணையதள முகவரியில் வெளியாகின்றது. மாணவர்கள் மேற்கண்ட இணையதள முகவரியில் இத்தேர்வு முடிவுகளை தெரிந்துக் கொள்ளலாம். இந்த அதிகாரபூர்வ இணையதள முகவரியில் தங்களது மதிப்பெண் பட்டியல்களையும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இதிலேயே மாணவர்களின் தரவரிசை பட்டியலையும் தெரிந்து கொள்ளலாம்.