'அப்பா கட்டட வேலை பாக்குறாங்க...' விஜய் சேதுபதியிடம் பேசிய மழலை! வைரல் வீடியோ!
இந்திய அளவில் மிகப் பிரபலமாக அறியப்படும் நடிகர் விஜய் சேதுபதி. கதாநாயகனாக மட்டுமில்லாமல், வில்லனாகவும், துணை கதாபாத்திரமாகவும் நடித்து அனைத்து தரப்பு ரசிகர்களிடையேயும் அப்ளாஸ் வாங்கிவிடுவார்.
இவரது நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள திரைப்படம் 'விடுதலை 1'. இதில் சூரி கதாநாயகனாக நடித்திருந்தாலும், முக்கிய கதாபாத்திரத்தை விஜய் சேதுபதி ஏற்று நடித்து பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளார். இவரது கைவசம் 'ஜவான்', 'மும்பைக்காரர்' உள்ளிட்ட படங்கள் இருக்கும் நிலையில், தேசிய விருது பெற்ற இயக்குநரான M.மணிகண்டன் இயக்கும் புதிய வெப் சீரிஸிலும் நடிக்கவிருக்கிறார்.
இவரது நடிப்பு, குழந்தை முதல் பெரியவர் வரை அனைத்து தரப்பினராலும் ரசிக்கும்படியாக இருக்கும். அதற்கேற்றார்போல் இவருக்கு 'மக்கள் செல்வன்' என்ற பட்டமும் பொருத்தமா அமைந்திருக்கும்.
இந்நிலையில் விஜய் சேதுபதி தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு குழந்தையுடன் உரையாடும் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில் அந்த குழந்தையுடன் உரையாடும் விஜய் சேதுபதி, 'அப்பா என்ன வேலை பாக்கறாங்கன்னு' கேட்க, 'அப்பா கட்டட வேலை பாக்குறாங்க' என சொல்வதில் ஆரம்பித்து அவரது செல்லமான கேள்விகளுக்கு, மழலை கொஞ்சும் குரலில் பதிலளிக்கிறது அந்தக் குழந்தை. இது சம்பந்தமான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ...