ஆந்திரத்தில் ரயில்கள் நேருக்கு நேர் மோதல்: 13 பேர் பலி!

Andhra Pradesh Train Accident
Andhra Pradesh Train Accident ANI

ந்திரத்தில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 13 பயணிகள் உயிரிழந்தனர். மேலும் 50-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் விசாப்பட்டினத்திலிருந்து ராய்கட்டாவுக்கு பயணிகள் ரயில் சென்றது. இதே வழித்தடத்தில் பலாசா என்ற இடத்திலிருந்து விசாகப்பட்டினம் நோக்கி மற்றொரு பயணிகள் ரயில் சென்றுகொண்டிருந்தது. இரண்டு ரயில்களும் அலமண்டா-கண்டகபள்ளி இடையே விபத்துக்குள்ளானது.

மொத்தம் 13 பேரி விபத்தில் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 7 பேரது உடல் அடையாளம் காணப்பட்டுள்ளது. மற்றவர்களின் உடலையும் அடையாளம் கண்டுபிடிக்கும் பணி நடந்து வருகிறது என்று மாவட்ட போலீஸ் கண்காணிப்பாலர் தெரிவித்தார்.

விபத்தில் காயமடைந்த 54 பேரில் 39 பேர் விசயநகரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்கள் இதர மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இந்த விபத்தில் விசாப்பட்டினம்-பலாஸா பயணிகள் ரயிலின் 11 பெட்டிகள் அலமண்டா ரயில்நிலையத்துக்கும் , விசாகப்பட்டினம் ராயகட்டா பயணிகள் ரயிலின் 9 பெட்டிகள்  கண்டகபள்ளி ரயில்நிலையத்துக்கும் கொண்டு செல்லப்பட்டதாகவும்  தடம்புரண்ட பெட்டிகள் தவிர மற்ற பெட்டிகள் பாதுகாப்பாக ரயில்நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மீடப்புப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. அனைத்து பயணிகளும் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். விபத்து தொடர்பாக முதல்வர் ஜெகன்மோகனிடம், பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு விவரங்களை கேட்டறிந்தார்.

சமீபத்தில் அதாவது கடந்த ஜூன் மாதம் 2ம் தேதி ஒடிஸாவின் பலாஸூரில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்து நடத்த அதே பாணியில் இந்த விபத்தும் நேரிட்டுள்ளது. சென்ற விபத்தில் 288 பயணிகள் பலியானார்கள். மேலும் 1,100 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மனித தவறுகளே விபத்துக்கு காரணம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்தை அடுத்து மற்ற சில ரயில்கள் வேறு மார்க்கத்தில் திருப்பிவிடப்பட்டன. சில ரயில்கள் ரத்துச் செய்யப்பட்டன.

விபத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த அதிர்ச்சியும் வேதனையும் தெரிவித்துள்ளார்.  உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அவர் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண விதி வழங்க முதல்வர் ஜெகன் மோகன் உத்தரவிட்டுள்ளார். எனினும் உயிரிழந்தவர்களில் பிறமாநிலத்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 2லட்சமும், வெளிமாநிலத்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிவாரண உதவியாக வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

இவை தவிர பிரதமர் நிவாரண நிதியிலிருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்க பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com