இந்தியா-சவுதி இடையே கையெழுத்தான 8 ஒப்பந்தங்கள்!

இந்தியா-சவுதி இடையே கையெழுத்தான 8 ஒப்பந்தங்கள்!

ந்தியா சவுதி இடையே உருவாக்கப்பட்ட வியூக கூட்டான்மை கவுன்சிலின் முதல் கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ஜி 20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக டெல்லி வந்தார். மாநாட்டை முடித்துவிட்டு நேற்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது இந்தியா மற்றும் சவுதி அரேபியாவின் நட்பை வளர்க்கும் வகையிலும், பல்வேறு துறைகளில் இணைந்து செயலாற்றவும் இரு நாடுகளுக்கிடையே வியூக கூட்டான்மை கவுன்சில் அமைக்கப்பட்டது.

அதனுடைய முதல் கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வந்த சவுதி பட்டத்து அரசருக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் மரியாதை அளிக்கப்பட்டது. அதன் பிறகு நடைபெற்ற கூட்டத்தில் இரு நாடுகளுக்கு இடையே கச்சா எண்ணெய் வர்த்தகத்தை மேம்படுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும் மகாராஷ்டிராவில் 50 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய பணிகளை விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டது.

மேலும் இரு நாடுகளுக்கு இடையேயான முதலீட்டை மேம்படுத்தவும் மின்சாரம், எரிசக்தி, பாதுகாப்பு, கல்வி, தொழில் நுட்பம், போக்குவரத்து, சுகாதாரம், சுற்றுலா, கலாச்சாரம் ஆகிய துறைகளில் இணைந்து செயல்படவும் முடிவு செய்யப்பட்டது. அதோடு குறிப்பிட்ட துறைகளை உள்ளடக்கி 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இந்த ஒப்பந்தங்கள் இந்தியா மற்றும் சவுதி அரேபியாவினுடைய நட்பு உறவை மேலும் வலுப்படுத்த வழி ஏற்பட்டு இருக்கிறது என்றும், கடந்த சில ஆண்டுகளாக இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவு மேம்பட்டு இருக்கிறது என்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

அதோடு 100 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் இரு நாடுகளுக்கு இடையே கூட்டுப்பணி குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு இரு நாடுகளும் இணைந்து பயணிக்க கூடிய துறைகளில் ஒப்பந்தத்தை மேற்கொண்டு அந்த துறையினுடைய முதலீடுகளுக்காக அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் மிக முக்கிய நட்புறவு நாடாக சவுதி அரேபியா மாறி இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com