இன்று விண்ணில் பாய்கிறது ஆதித்யா L1: வெற்றிக் கொடியை நாட்டுமா?

இன்று விண்ணில் பாய்கிறது ஆதித்யா L1: வெற்றிக் கொடியை நாட்டுமா?

சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா - L1 விண்கலம் இன்று விண்ணை நோக்கிப் பாய உள்ளது. சூரியனைப் பற்றி ஆய்வு செய்வதற்காக அனுப்பப்படும் ஆதித்யா - எல்1 விண்கலம் விண்ணில் பாய தயார் நிலையில் உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. நிலவு குறித்த ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ள இஸ்ரோ, சூரியன் குறித்த ஆய்விலும் ஈடுபடுகிறது. இந்த ஆதித்யா எல் - 1 விண்கலம், பி.எஸ்.எல்.வி.சி - 57 ராக்கெட் மூலம் இன்று காலை 11.50 மணிக்கு விண்ணில் ஏவப்படவுள்ளது.

தயார் நிலையில் உள்ள ஆதித்யா - எல்1 விண்கலம், பெங்களூருவில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து ஸ்ரீஹரிகோட்டாவிற்கு  கொண்டுசெல்லப்பட்டது. சூரியனைப் பற்றிய ஆராய்ச்சியை இந்த விண்கலம் மேற்கொள்ள உள்ளதால், அதற்கு ஆதித்யா என்று பெயரிடப்பட்டுள்ளது.

சூரியன் மற்றும் பூமியின் மையப் பகுதியான 'லெக்ரேஞ்சியன் பாயின்ட் ஒன்'-ஐ மையமாகக் கொண்டு இந்த விண்கலம் ஏவப்பட உள்ளதால்,  ஆதித்யா- எல்1 என்று இஸ்ரோ பெயரிட்டுள்ளது. பூமியில் இருந்து சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தூரம் கொண்ட சூரியனின் 'லெக்ரேஞ்சியன்’ புள்ளி 1-ல் நிலைநிறுத்தப்பட உள்ளது.

நான்கு மாத கால பயணத்திற்குப் பிறகு  இந்த விண்கலம் அதன் சுற்றுப்பாதையில் நுழைய உள்ளது. பின்னர்  சூரியனைப் பற்றிய ஆய்வுகளை ஆதித்யா - எல்1 மேற்கொள்ள உள்ளது. சூரியனில் எழக்கூடிய சூரிய புயல்களை முன்கூட்டியே கண்டறிவதற்கும் இந்த முயற்சி பயனுள்ளதாக இருக்கும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com