சூரியனை நோக்கிய பயணத்தில் ஆதித்யா-L1 சுற்றுப்பாதை 5வது முறையாக அதிகரிப்பு!

ஆதித்யா- எல்1
ஆதித்யா- எல்1

ந்திரயான் 3 விண்கலத்தின் வெற்றியைத் தொடர்ந்து, கடந்த செப்டம்பர் 2ம் தேதி சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா L1 என்ற விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இது கடந்த 17 நாட்களாக பூமியின் சுற்றுவட்டப் பாதையில், சூரியனை நோக்கி பயணிப்பதற்கான உந்துவிசையைப் பெற, பூமியை சுற்றிக் கொண்டிருந்த நிலையில், அதன் உயரத்தை கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தி வந்தது இஸ்ரோ. 

இதன் கடைசி சுற்றுபட்டபாதை உயர்வானது கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி வெற்றிகரமாக நிறைவடைந்தது. மேலும் ஆதித்ய L1 குறித்த பல தகவல்களை இஸ்ரோ தனது எக்ஸ் தளத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறது. அதன்படி, சூரியனை நோக்கி தனது பயணத்தை ஆதித்யா L1 தொடங்கிவிட்டதாக இஸ்ரோ பதிவிட்டுள்ளது. 

இஸ்ரோவின் இந்த நடவடிக்கை இன்று அதிகாலை சரியாக 2 மணியளவில் மேற்கொள்ளப்பட்டது. இதனால் சூரியனை நோக்கிய தன் பயணத்தை வெற்றிகரமாக தொடங்கி இருக்கிறது ஆதித்யா L1. இன்று முதல் அடுத்த 110 நாட்களுக்குப் பிறகு நிர்ணயிக்கப்பட்ட புள்ளியை ஆதித்யா எல் ஒன் அடையும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. அதன்பிறகு அந்த புள்ளியில் இருந்து ஹேலோ சுற்றுவட்டப் பாதையில் இந்த விண்கலம் நிலைநிறுத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்த விண்கலம் பயணம் செய்து கொண்டிருக்கும் நிலையிலேயே, அதில் பொருத்தப்பட்டுள்ள ஸ்டெப்ஸ் என்ற உபகரணத்தைப் பயன்படுத்தி, தன் ஆய்வுகளை இஸ்ரோ மேற்கொள்ளவிருக்கிறது. இதுகுறித்து இஸ்ரோ போட்டுள்ள பதிவில், "Trans-Legrangean Point 1 Insertion வெற்றிகரமாக முடிந்தது. இப்போது விண்கலம் சூரியனை நோக்கிய பாதையில் உள்ளது. இது விண்கலத்தை நிர்ணயிக்கப்பட்ட L1 புள்ளிக்கு கொண்டுசெல்லும். இது சுமார் 110 நாட்களுக்குப் பிறகு L1 சுற்றுப்பாதையை அடையும். இஸ்ரோ, ஒரு பாதையில் உள்ள ஒரு பொருளை மற்றொரு இடத்திற்கு வெற்றிகரமாக மாற்றுவது இது தொடர்ந்து ஐந்தாவது முறையாகும்," எனப் பதிவிட்டுள்ளது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com