‘ஜெயிலர்’ படத்திற்கு தடை விதிக்கவேண்டும்:வழக்கறிஞர் பொதுநல வழக்கு!

ஜெயிலர்
ஜெயிலர்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் நெல்வன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி பெரும் வெற்றியுடன் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கும் ஜெயிலர். இப்படத்தில் திரைப்படத்தில் அளவு கடந்த வன்முறை இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்திருந்த நிலையில் இந்தப் படத்துக்கு தடை விதிக்கவும்  தணிக்கைச் சான்றிதழை ரத்து செய்யக் கோரியும் வழக்கறிஞர் எம் .எல் .ரவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார் .
 

அதில் அவர்  “ஜெயிலர் திரைப்படத்தை அண்மையில் பார்த்தேன். இந்த திரைப்படத்தில் மிக மோசமான படு பயங்கரமான வன்முறை காட்சிகள் பல இடம் பெற்றுள்ளன. இந்த திரைப்படத்திற்கு யுஏ சான்றிதழை தணிக்கை வாரியம் வழங்கியுள்ளது அதனால் எந்த தடையும் இல்லாமல் இளைஞர்கள் குழந்தைகள் இந்தத் திரைப்படத்தைப் பார்க்கின்றனர்.

 ஆனால் படுபயங்கரமான வன்முறை காட்சிகள் பல இந்த திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளன. பெரிய சுத்தியலைக் கொண்டு ஒருவரின் தலையை அடித்து சிதைப்பது ,ஒரு பெரிய வாளை வைத்து ஒருவரது தலையை ரஜினிகாந்தின் துண்டிப்பது போன்ற வன்முறை காட்சிகள் இடம் பெற்றுள்ளன.ஏற்கனவே தமிழ்நாட்டில் விசாரணைக்கு அழைத்து வந்தவர்கள் பற்களை அகற்றினார் என்ற குற்றச்சாட்டில் ஒரு ஐபிஎஸ் அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் அப்படி இருக்கும்போது இந்த படத்தில் திகார் சிறையில் ரஜினிகாந்த் செயலராக இருக்கும்போது தண்டனை கைதியின் காதை துண்டிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன .

சினிமா என்பது மக்களை மிக எளிதில் கவர்ந்து விடும். அப்படி இருக்கும்போது இந்த படத்தை பார்க்கும் இளைஞர்கள் குழந்தைகளின் மனதில் வன்முறை எண்ணம்தான் உண்டாகும் எனவே ஜெயிலர் படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும். இந்தப் படத்துக்கு வழங்கப்பட்ட யு ஏ தணிக்கை சான்றிதழை ரத்து செய்ய வேண்டும்” என்று  கூறியுள்ளார் இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது . 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com