சரத் பவார்- அஜித் பவார்
சரத் பவார்- அஜித் பவார்

அஜித் பவார் என்.சி.பி. தலைவர்,கட்சியில் பிளவும் இல்லை:சரத்பவார்

மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் அஜித் பவார் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் (என்.சி.பி.) தலைவராக இருக்கிறார். கட்சியில் பிளவு ஏதும் இல்லை என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தெரிவித்தார்.

அஜித் பவார் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் எம்.எல்.ஏ. என்று மகளும் கட்சியின் செயல் தலைவருமான சுப்ரியா கூறிய அடுத்த நாளே கட்சித் தலைவர் சரத் பவார், புனே மாவட்டத்தில் தமது சொந்த ஊரான பாராமதியில் செய்தியாளர்களிடம் பேசினார்.

இப்போது அவர் (அஜித் பவார்) கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளார். இது தொடர்பாக நாங்கள் சட்டப்பேரவைத் தலைவரிடம் புகார் தெரிவித்துள்ளோம். மேலும் அவருடைய பதிலுக்காக காத்திருக்கிறோம் என்று என்.சி.பி.யின் பாராமதி எம்.பி. சுப்ரியா சுலே வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார்.

அஜித் பவார் என்.சி.பி. தலைவர் என்று சுப்ரியா சுலே கூறியது பற்றி சரத் பவாரிடம் கேட்டதற்கு, “ஆம் அது பற்றிய கேள்விக்கே இடமில்லை என்று கூறிய அவர், தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளதா எப்படி கூற முடியும் என்றார். அஜித் பவார் எங்கள் கட்சித் தலைவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றார் அவர்.

அரசியல் கட்சியில் பிளவு என்றால் என்ன அர்த்தம்? ஒரு கட்சியில் தேசிய அளவில் பெரிய குழு பிரிந்து சென்றால்தான் பிளவு என்று சொல்ல முடியும். ஆனால், இங்கு அப்படி எதுவும் நடக்கவில்லை. இங்கு சிலர் மட்டும் கட்சியை விட்டு சென்றுள்ளனர். சிலர் வேறுவிதமான நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். ஜனநாயகத்தில் முடிவெடுப்பதற்கு அவர்களுக்கு உரிமை உள்ளது என்றும் சரத் பவார் கூறினார்.

கடந்த ஜூலை மாதம் 2 ஆம் தேதி அஜித் பவார் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 8 எம்.எல்.ஏ.க்களும், மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை-பா.ஜ.க. கூட்டணி அரசில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com