ரஜினி பரிசாகப் பெற்ற காரின் மிரள வைக்கும் சிறப்பம்சம்!

ரஜினி பரிசாகப் பெற்ற காரின் மிரள வைக்கும் சிறப்பம்சம்!

ஜெய்லர் திரைப்படத்தின் பிரம்மாண்ட வசூலைத் தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் நடிகர் ரஜினிகாந்த்திற்கு வழங்கி உள்ள காரின் மிரள வைக்கும் சிறப்பம்சங்கள் தெரியுமா உங்களுக்கு?

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்று இருக்கிறது. 580 கோடி ரூபாய் தற்போது வரை வசூலை ஈட்டி இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர்.

இந்த நிலையில், பிரம்மாண்ட வெற்றி பெற்றிருக்கக்கூடிய ஜெயிலர் திரைப்படத்தின் தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கலாநிதி மாறன், இயக்குனர் நெல்சன் மற்றும் நடிகர் ரஜினிகாந்திற்கு கார்களை பரிசாக வழங்கியுள்ளார்.

குறிப்பாக, நடிகர் ரஜினிகாந்திற்கு வழங்கி உள்ள கார் பி.எம்.டபிள்யூ எக்ஸ் 7 வகை மாடலாகும். இந்த மாடல் 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் 17ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கார் பேஸ்லிப்ட் உருமாற்றம் செய்யப்பட்ட வகையாகும். மேலும், இந்த காரில் இரு ஹைபிரிட் இஞ்சின் வகைகள் உள்ளன. பெட்ரோல் மற்றும் எலக்ட்ரிக் வகையும் மற்றொரு வகை டீசல் மற்றும் எலக்ட்ரிக் வகையையும் ஆகும். இந்த இரண்டும் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் வகையை கொண்டு உருவாக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

பெட்ரோல் ஹைபிரிட் இன்ஜின் 2998 சிசி திறன் கொண்டது. இந்தக் காரின் சென்னை மதிப்பு 1.51 கோடியாகும். டீசல் ஹைபிரிட் இஞ்சின் 2993 சிசி திறன் கொண்டது. இதனுடைய சென்னை மதிப்பு 1.54 கோடியாகும். இதில் உள்ள பெரிய ஸ்டைலான கிரில் காருக்கு கம்பீர தோற்றத்தை தருகிறது. அதன் இரு புறங்களிலும் உள்ள பம்பர்கள் ஹைலைட்டானவை. அதே போல் உட்புறத்தில் பிரீமியம் லெதர் சீட்டுகள், சன்ரூப், 14 வண்ணங்கள் கொண்ட கேபின் லைட்டிங், 16 ஸ்பீக்கர்கள் கொண்ட ஹார்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம், 15 இன்ச் டிரைவர் டிஸ்பிளே யூனிட் ஆகியவை இதன் சிறப்பம்சங்கள் ஆகும்.

2993 சிசி திறன் கொண்ட இதன் பவர்புல் என்ஜின் 335 முதல் 375 பிஎச்.பி பவரை வெளிப்படுத்தும். 520 முதல் 700 நியூட்டன் மீட்டர் டார்க்கை அளிக்கும். இதன் மூலம் 0 - 100 கி.மீ வேகத்தை வெறும் 6 விநாடிகளில் அடைய முடியும்.

இந்த வகை கார் பாதுகாப்பு அம்சத்திலும் மிரள வைக்கிறது. டைனமிக் டிராக் ஷன் கன்ட்ரோல், ஆட்டோமேட்டிக் டிப்ரன்ஷியல் பிரேக்ஸ், அடாப்டிவ் டூ அக்சில் ஏர் சஸ்பென்ஷன், 360 டிகிரி கேமரா, ஸ்மார்ட்போன் மூலமாக ரிமோட் பார்கிங், ஏர் பேக்ஸ், ஹில் ஸ்டார்ட் அசிட், ஹில் டிசன்ட் கன்ட்ரோல் ஆகியவை கூடுதல் சிறப்புகள் ஆகும்.

கார்பன் கருப்பு மெட்டாலிக் நிறம் கொண்ட காரை கலாநிதி மாறன் ரஜினிக்கு பரிசாக வழங்கியுள்ளார். இந்த கார் நான்கு கலர்களில் தயாரிக்கப்படுகிறது. குறிப்பாக கருப்பு மற்றும் வெள்ளை நிறங்கள் அதிக விற்பனையாகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com