கர்நாடகாவில் உள்ள பழமை வாய்ந்த ஒய்சாலா கோயிலுக்கு யுனெஸ்கோவின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
யுனெஸ்கோ வழங்கும் அங்கீகாரம் சர்வதேச நிதியை பெற்று தருவது மட்டுமல்லாமல் உலகின் மிக முக்கிய சுற்றுலா மைய இடங்கமாக புகழ் அடைய செய்யும். இதனாலையே யுனெஸ்கோவினுடைய அங்கீகாரத்தை பெற உலகம் முழுவதுமே உள்ள முக்கிய இடங்களுக்குள் கடுமையான போட்டி நடைபெறும். இந்தியாவில் இதுவரை 41 இடங்களுக்கு யுனேஸ்கோ பாரம்பரிய அங்கீகாரம் வழங்கி இருக்கிறது.
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒய்சாலா கோயிலினுடைய கட்டிடத்தன்மை, அதனுடைய தொன்மை குறித்து யுனெஸ்கோவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதைத்தொடர்ந்து நீண்ட ஆய்வு, மக்களுடைய கருத்து கேட்பு என்று பல கட்ட நடவடிக்கைகளுக்கு பிறகு தற்போது கர்நாடகாவில் ஒய்சாலா கோயிலுக்கு தற்போது யுனெஸ்கோவினுடைய பாரம்பரிய கட்டிடக்கலைக்கான அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. இதற்கு வாழ்த்துக்கள் என்று யுனெஸ்கோ எனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளது.
அதே சமயம் கர்நாடகாவில் உள்ள போலூர், ஹாலேபித், சோம்நாத்புரம் ஆகிய கோயில்களுக்கு ஏற்கனவே யுனெஸ்கோவின் அங்கீகாரம் வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதன் தொடர்ச்சியாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஒய்சாலா கோயில் யுனெஸ்கோவினுடைய பாரம்பரிய அங்கீகாரத்தை பெற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சியான செய்தி. இந்தியாவுடைய தொன்மைக்கும் கட்டிடக்கலைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கிய இந்த கோயில் பிரமிக்கச் செய்யும் தோற்றத்தையும் பூர்வீக வரலாற்றை கொண்டது.
மேலும் இந்த கோயிலுடைய கட்டிடக்கலை தற்போதைய தொழில்நுட்பத்திற்கே சிக்கலானதாக இருக்கிறது. இப்படி அழகான கலை நம் முன்னோர்களினுடைய கைவினையினுடைய வெளிப்பாடு என்று தெரிவித்துள்ளார்.யுனெஸ்கோவின் உடைய இந்த அங்கீகாரத்தின் மூலம் கர்நாடக ஒய்சாலா கோயில் சர்வதேச நிதியை பெறுவதோடு மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள சுற்றுலா பயணிகளை மேலும் கவரும்.