ஆதாருடன் இணைக்காத வங்கி கணக்கு முடக்கம்!

ஆதாருடன் இணைக்காத வங்கி கணக்கு முடக்கம்!

தார் எண்களை இணைக்காத வங்கிக் கணக்குகள் செப்டம்பர் 30ம் தேதி பிறகு முடக்கப்படும் என்று ஒன்றிய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆதார் இந்தியாவினுடைய முக்கிய அடையாள அட்டைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. மேலும் ஆதார் எண்ணை பல்வேறு ஆவணங்களுடன் இணைக்க ஒன்றிய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதன் அடிப்படையில் வங்கி கணக்குகளில் ஆதார் எண்ணை இணைப்பதற்காக பல்வேறு கட்ட அவகாசங்கள் வழங்கப்பட்டு இணைக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் நபர்கள் மற்றும் வைப்புத்தொகை கணக்கு பராமரிப்பவர்கள் தங்கள் ஆதார் எண்களை வங்கிகளில் அல்லது அஞ்சல் அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

தற்போது ஒன்றிய நிதி அமைச்சகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. மூத்த குடிமக்கள் பலரும் சேமிப்பு கணக்குகளில் தங்கள் ஆதார் எண்ணை இணைக்காமல் இருக்கின்றனர். மற்றும் பலரும் சேமிப்பு கணக்கு, வருங்கால வைப்பு நிதி கணக்கில் தங்கள் ஆதார் எண்ணை இணைக்காமல் இருக்கின்றனர். அவர்கள் செப்டம்பர் 30ம் தேதிக்குள் கட்டாயம் இணைக்க வேண்டும். தவறும் பட்சத்தில் வங்கி கணக்கு முடக்கப்படும்.

தற்போதைய அறிவிப்புக்கு பிறகு அவகாசம் வழங்கப்பட மாட்டாது எனவே ஆதார் எண்ணை வங்கிக் கணக்கில் இணைக்காதவர்கள் கட்டாயம் வரும் 30ம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இப்படி பதிவு செய்பவர்களால் மட்டுமே வங்கிக் கணக்கை தொடர முடியும், அரசின் சலுகைகளை பெற முடியும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com