பிரேசில் கால்பந்து ஜாம்பவான் ரொனால்டினோ கொல்கத்தா வருகிறார்!

பிரேசில் கால்பந்து ஜாம்பவான் ரொனால்டினோ கொல்கத்தா வருகிறார்!
https://encrypted-tbn2.gstatic.com/

பிரேசில் கால்பந்து ஜாம்பவான் ரொனால்டினோ, துர்கா பூஜை விழா கொண்டாடப்படும் நேரத்தில், அதாவது இந்த மாதம் 16 ஆம் தேதி கொல்கத்தா வருகிறார். மூன்று முறை பலூன் டி’ஓர் விருதுபெற்ற ரொனால்டினோ, கால்பந்து ரசிகர்கள் நிறைந்த கொல்கத்தாவுக்கு வருவது இதுவே முதல் முறையாகும்.

பீலே, டியாகோ மரடோனா மற்றும் லயோனல் மெஸ்ஸி போன்ற இதர கால்பந்து ஜாம்பவான்கள் ஏற்கெனவே கொல்கத்தா வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

“அனைவருக்கும் வணக்கம். நான் அக்டோபர் மாதம் 16 ஆம் தேதி முதன் முறையாக கொல்கத்தா வருகிறேன்” என்று ரொனால்டினோ தனது முகநூல் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார்.

“பிரேசில் கால்பந்து அணியின் ரசிகர்கள் பலர் கொல்கத்தாவில் இருப்பது எனக்குத் தெரியும். அவர்களைச் சந்திப்பதில் ஆர்வமாக இருக்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜியை சந்திக்க விரும்புவதாகவும், அவருக்கு தனது “ஜெர்ஸி” ஒன்றை பரிசாக அளிக்க விரும்புவதாகவும் ரொனால்டினோ தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் ஜாம்பவான் செளரவ் கங்குலியிடம் தாம் கிரிக்கெட் ஆட கற்றுக்கொள்ள ஆர்வமாக இருப்பதாகவும் ரொனால்டினோ கூறியுள்ளார். “இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டு மிகவும் என்பது எனக்குத்தெரியும். எனவே பெங்காலின் தாதாவான கங்குலியிடம் கிரிக்கெட் ஆட கற்றுக்கொள்ள விரும்புகிறேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

நான் கொல்கத்தாவில் கால்பந்து விளையாட்டு ஸ்பான்சர்கள் உள்ளிட்ட பலரிடம் உரையாட விரும்புகிறேன். மேலும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இருக்கிறேன். கால்பந்து விளையாட்டை மேம்படுத்துவதே எனது நோக்கமாகும். சம்பா மேஜிக்குடன் இந்த துர்காபூஜை தொடங்கட்டும். நான் உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன் என்றும் ரொனால்டினோ கூறியுள்ளார்.

மேலும் ரொனால்டினோ டைமண்ட் ஹார்பர் கால்பந்து மைதானத்தில் நிதிதிரட்டுவதற்காக நடத்தப்படும் கால்பந்து போட்டியிலும் பங்கேற்க இருக்கிறார். ஸ்பான்ஸர்களுடன் தொடர்பு கொள்வது, இந்தியர்கள் விரும்பி ரசிக்கும் கால்பந்து விளையாட்டை மேம்படுத்துவது என பல நிகழ்ச்சிகள் அவர் பங்கேற்க உள்ளார்.

இந்த மாதம் 16 ஆம் தேதி கொல்கத்தா வரவிருக்கும் ரொனால்டோ இரண்டு நாட்கள் தங்கி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். பின்னர் இங்கிருந்து அவர் டாக்கா செல்ல இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2002 ஆம் ஆண்டு உலகக் கோப்பை வெற்றியாளரான ரொனால்டினோ கொல்கத்தாவில் ஒன்றிரண்டு கால்பந்து போட்டிகளிலும் பங்கேற்பதுடன், கால்பந்து பயிற்சியாளர்களையும் சந்தித்து உரையாடுகிறார். மேலும் துர்கா பூஜை பந்தல்களையும் திறந்துவைக்க இருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com