செங்கல் உற்பத்தி பாதிப்பு: நலிவடைந்து வரும் உரிமையாளர்கள்!

செங்கல் உற்பத்தி பாதிப்பு: நலிவடைந்து வரும் உரிமையாளர்கள்!

ட்டுமானத்திற்கு பிரதான பொருளாக உள்ள செங்கல் உற்பத்திக்கான மூலப்பொருட்களின் விலை ஏற்றத்தின் காரணமாக செங்கல் சூளை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் உற்பத்தி குறைய தொடங்கி இருப்பதாக கூறுகின்றனர்.

கட்டுமானத்துறை வளர்ச்சியை சந்தித்து வந்தாலும் கட்டுமான துறையை நம்பி உள்ள சிறுகுறு தொழில்கள் நலிவடைந்து வருவதாக கட்டுமான தொழிலாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இவ்வாறு செங்கல் உற்பத்திக்கான மூலப் பொருட்களில் ஏற்பட்டுள்ள விலை ஏற்றத்தின் காரணமாக செங்கல் சூளை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறுகின்றனர்.

சேலம் மாவட்டத்தின் ஆத்தூரை சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் இருக்கின்றன. இதை நம்பி 7000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது.

இந்த நிலையில் செங்கல் சூளை உரிமையாளர் கூறியது, தற்போது சிமெண்ட் கல்கள் அதிகரிக்க தொடங்கிவிட்டன. சிமெண்ட் கல் வெயிலை தாங்காது, அதே நேரம் செங்கல் கட்டிடத்தை கூலியாக வைத்துக் கொள்ளும், மேலும் சிமெண்ட் கல் விரைவில் தூளாகி விடக் கூடியது, செங்கல் ஆண்டாண்டு காலம் தாக்குப் பிடிக்கக் கூடியது. இதனால் செங்கலுக்கு எப்போதுமே தனி மவுஸ் உள்ளது.

இந்த நிலையில் செங்கல் உற்பத்தியினுடைய முக்கிய மூலப்பொருளாக உள்ள மண் தட்டுப்பாடு, விலை உயர்வு காரணமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. நான்கு யூனிட் டிப்பல்லாரியுடைய மதிப்பு தற்போது 8,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் வருமானம் குறைகிறது. மேலும் செங்கலை வேக வைக்க பயன்படும் விறகு 3000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாலும் செங்கல் சூளை உரிமையாளர்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அதே நேரம் செங்கலை 6 ரூபாய் முதல் 6 ரூபாய் 50 காசு வரை மட்டுமே கொள்முதல் செய்கின்றனர். இதனால் போதிய விலை கிடைக்காமல் நஷ்டம் ஏற்படுகிறது. இதனால் பல செங்கல் சூளை உரிமையாளர்கள் சூளையை மூடிவிட்டு பிற சூளைகளுக்கு வேலைக்கு செல்வதாக தெரிவிக்கின்றனர்.

இதைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு செங்கல் சூளை உற்பத்தியாளர் மற்றும் தொழிலாளர்கள் நலனை பாதுகாக்க உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com