தொண்டர்களை பார்த்து கையசைத்த கேப்டன்.. கண்கலங்கிய ரசிகர்கள்!

கேப்டன் விஜயகாந்த்
கேப்டன் விஜயகாந்த்Intel

தேமுதிக தலைவரும் நடிகருமான கேப்டன் விஜயகாந்த் தனது பிறந்தநாளை முன்னிட்டு இன்று தொண்டர்களை சந்தித்தார்.

கேப்டன் விஜயகாந்த் இன்று தனது 71வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி அரசியல் பிரபலங்கள், திரை பிரபலங்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று காலை தேமுதிக அலுவலகத்திற்கு வந்த கேப்டன் விஜயகாந்த், ரசிகர்களை பார்த்து கையசைத்தார். இதனை பார்த்த தொண்டர்கள் மனம் மகிழ்ந்து நெகிழ்ச்சியில் கண்கலங்கினர். மேலும் அவரின் உடல்நிலையை கண்டும் மனம்வருந்தினர்.

கடந்த 2014ம் ஆண்டு கேப்டன் விஜயகாந்த் திடீரென உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டார். இதை தொடர்ந்து பல்வேறு சிகிச்சைகள் எடுத்த பின்னரும், அவரது உடல் நிலை மோசமாகிக்கொண்டே சென்றதால், பிரேமலதா மற்றும் மகன்களுடன் சிங்கப்பூர், மலேசியா, லண்டன் சென்று சிகிச்சை அளித்தனர்.

உடல்நிலை சற்று முன்னேறிய நிலையிலும் அவர் தொய்வாகவே காணப்பட்டார். விஜயகாந்தின் அந்த கனீர் குரலை கேட்கமுடியாமல் தொண்டர்கள் வேதனையில் இருந்தனர். அவர்களின் மன நிம்மதிக்காக ஒவ்வொரு ஆண்டு பிறந்த நாள் அன்று இது போன்று ரசிகர்களை சந்திப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் இன்று காலை தொண்டர்களை சந்தித்து கையசைத்தார். இவரை பார்த்த ரசிகர்கள் வாரி இறைத்த வள்ளல் தெய்வம் இன்று எலும்பும் தோலுமாக காட்சியளிப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும், எழுந்து வா தலைவா என கத்தி கூச்சலிட்டனர்.

இந்த நிலையில் மேடையில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், கேப்டனின் உடல்நிலை குறித்து ஊடகங்கள் தவறான செய்திகளை வெளியிட்டு வருகின்றன. தொண்டர்கள் யாரும் அதை நம்ப வேண்டாம். நமது தலைவர் நூறாண்டு காலம் வாழ்வார் என்று தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com