காவிரி நதிநீர் பங்கீடு: கர்நாடகாவுக்கு தண்ணீர் தர எண்ணம் இல்லை- அமைச்சர் துரைமுருகன்

Kavery water issue TN Minister Meet Central Minister Gajendra Singh Shekhawat file image
Kavery water issue TN Minister Meet Central Minister Gajendra Singh Shekhawat file image

ர்நாடாகவுக்கு காவிரி நீரை தமிழகத்திற்கு தரும் எண்ணத் இல்லை என காவிரி நதிநீர் பங்கீடு விஷயம் தொடர்பாக டெல்லி சென்றிருந்த தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

காவிரி விவகாரம் தொடர்பாக புது டெல்லியில் இன்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர ஷெகாவத்தை சந்தித்துப் பேசிய சுமூக தீர்வுகான தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்றைய தினம் டெல்லி சென்றிருந்தார்.

இந்நிலையில் இன்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர ஷெகாவத்தை சந்தித்துப் பேசிய பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது, ”கர்நாடகாவில் காவிரி நீர் உள்ளது. ஆனால் காவிரி மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டுத்தலை பின்பற்றி அதன்படி தமிழகத்தற்கு தண்ணீர் தர மறுக்கிறார்கள். கர்நாடாகாவில் கிட்டதட்ட 54 டிஎம்சி காவிரி நீர் உள்ளது. ஆனால், ஆங்காங்கே சிறு சிறு அணைகள் கட்டி அதில் தண்ணீரை தேங்கி வைத்துள்ளனர். ஆனால், கர்நாடகாவுக்கு தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடவேண்டும் என்ற எண்ணம் இல்லை. இதுதொடர்பான மத்திய அரசு என்ன செய்யப்போகிறது என மத்திய அமைச்சரிடம் விவாதித்தோம்.

இரண்டு மாநிலத்திற்கும் தண்ணீர் பற்றாகுறை ஏற்படும் நாளில் காவிரி ஒழுங்காற்று ஆணையம் பரிந்துரைத்த அடிப்படையில் நீரை பங்கீட்டு கொள்வதுதான் சரியான நடைமுறையாக இருக்கும். அதேபோல் இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலும் உள்ளது. ஆனால், கர்நாடகா அரசு பின்பற்றாமல் வறட்சியை காரணம்காட்டிவருகிறார்கள். தேவைப்பட்டால் இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை நாடவும் தயராக உள்ளோம்” என்றார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com