என்.சி.பி. தலைவர் சரத் பவார் ஓ.பி.சி. பிரிவைச் சேர்ந்தவரா?: வைரலான சான்றிதழால் பரபரப்பு!

சரத்  பவார்
சரத் பவார்

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) தலைவர் சரத் பவார் இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) பிரிவைச் சேர்ந்தவர் எனக் காட்டும் சான்றிதழ் வைரலாகியுள்ளது. மகாராஷ்டிராவில் இடஒதுக்கீடு கோரி மராத்தியர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எனினும் என்சிபி தலைவரும், பவாரின் மகளுமான சுப்ரியா சுலே, சான்றிதழில் கூறப்பட்ட தகவல்களை மறுத்துள்ளார். அது போலியான சான்றிதழ் என்றும் கூறியுள்ளார். "இது யாரோ ஒருவரின் சிறுபிள்ளைத்தனமான செயலாகும். சரத் பவார் 10-ம் வகுப்பு படிக்கும் போது ஆங்கில வழி பள்ளிகள் இருந்ததா? அது பற்றி மக்கள் சிந்திக்க வேண்டாமா? " என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

வைரலான சான்றிதழில் சரத் பவாரின் விவரங்கள் ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டிருந்தன.இதனியையே சரத் வாரின் ஆதரவாளரான விகாஸ் பசல்கரும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஓ.பி.சி. பிரிவைச் சேர்ந்தவர் என்ற தகவலை  நிராகரித்தார். பவாரின் சாதியை 'மராத்தா' எனக் காட்டும் பள்ளிக் கல்விச் சான்றிதழை அவர் வெளியிட்டார்.

"இதுபோன்ற போலி சான்றிதழ்களைப் பயன்படுத்தி, சரத் பவார் போன்ற பெரிய தலைவருக்கு  அவப்பெயரை ஏற்படுத்த சதி நடக்கிறது. இதை என்சிபி பொறுத்துக்கொள்ளாது" என்றும் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில்  பசல்கர் கூறினார்.

பசல்கர் பகிர்ந்துள்ள சான்றிதழ் புனேவின் பாரமதி மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் வழங்கப்பட்டது. அதில் சரத் பவார் மார்ச் 1958 இல் எஸ்எஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றதாக கூறப்பட்டுள்ளது.

மராத்தியர்களுக்கு இடஒதுக்கீடு கோரி சமீபத்தில் மகாராஷ்டிரா முழுவதும் வன்முறை வெடித்தது. அரசு வேலை மற்றும் கல்வியில் இடஒதுக்கீடு கோரி மாநிலம் முழுவதும் மராத்தா சமூகத்தினர் பரவலான போராட்டங்களை நடத்தினர்.

நவம்பர் 2 ஆம் தேதி, மராத்தா கோட்டா ஆர்வலர் மனோஜ் ஜராங்கே தனது காலவரையற்ற உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ள ஒப்புக்கொண்டார். மராத்தியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் வரை பணி நியமனத்தை மேற்கொள்ள வேண்டாம் என மாநில அரசுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com