
சந்திரயான் 3 பிரக்யான் ரோவர் லேண்டரில் இருந்து நிலவில் தரையிறங்கிய காட்சிகள் வெளியாகியுள்ளது.
உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கப்பட்டது. நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக கடந்த ஜூலை 14ஆம் தேதி சந்திரயான் -3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது.
35 நாட்களாக புவி வட்டப்பாதை மற்றும் நிலவின் சுற்றுப்பாதைகளை நிறைவு செய்த விண்கலத்தில் இருந்து, வியாழன் பகல் ஒரு மணியளவில் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக பிரிந்தது. தொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெற்றிகரமாக சந்திரயான் 3 தரையிரக்கப்பட்டது.
இந்த நிகழ்வுகளை எல்லாம் அவ்வபோது இஸ்ரோ படமாகவும், வீடியோவாகவும் வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த அரிய, சாதனை படைத்த நிகழ்வை இஸ்ரோ வீடியோவாக வெளியிட்டுள்ளது.
அதில், பிரக்யான் ரோவர் விக்ரம் லேண்டரில் இருந்து பிரிந்து நிலவில் தரையிறங்கிய காட்சிகள் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னதாக சந்திரயான் 2 ஆர்பிட்டர் விக்ரம் லேண்டரை படம் பிடித்து அனுப்பியது. அதனையும் இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
இதனை பார்த்த ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், லேண்டர் மற்றும் ரோவர் ஆகியவை சிறப்பாக செயல்பட்டு வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.