ஏன் இந்தியாவின் சின்னம் நிலவில் பதியவில்லை தெரியுமா? 

Chandrayaan 3
Chandrayaan 3

நிலவில் தூங்கிக் கொண்டிருக்கும் பிரகியான் ரோவரும் விக்ரம் லேண்டரும் மீண்டும் செயல்படுமா என விஞ்ஞானிகள் முயற்சித்துக் கொண்டிருக்கும் வேளையில், பிரக்யான் ரோவர் நிலவில் பயணித்தபோது அதன் சக்கரங்களில் இருந்த இந்தியாவின் சின்னம் ஏன் நிலவில் பதியவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கான விளக்கத்தை இஸ்ரோ தலைவர் சோமநாத் அளித்துள்ளார். 

உலகிலேயே முதன்முறையாக நிலவின் தெந்துருவத்தை ஆய்வு செய்யும் நோக்கில் இஸ்ரோவால் அனுப்பப்பட்ட சந்திரயான் 3 விண்கலம், வெற்றிகரமாக அங்கு தரையிறங்கியது. பின்னர் தரையிறங்கிய விக்ரம் லேண்டரிலிருந்து வெளிவந்த ரோவர், 14 நாட்கள் பல்வேறு ஆய்வுப் பணிகளை மேற்கொண்டது. 14 நாட்களுக்குப் பிறகு நிலவில் சூரிய ஒளி குறையத் தொடங்கியதால், லேண்டரும் ரோவரும், ஸ்லீப் மோடில் வைக்கப்பட்டது. 

14 நாட்களுக்குப் பிறகு செப்டம்பர் 22ஆம் தேதி தென்துருவத்தில் மீண்டும் சூரிய ஒளி படரத் தொடங்கியதால், அதுவரை மைனஸ் டிகிரி செல்சியஸில் ஸ்லீப் மோடில் இருந்த விக்ரம் லேண்டரையும் பிரக்கியான் ரோவரையும் மீண்டும் செயல்படச் செய்யும் முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது. ஆனால் தற்போது வரை அவற்றிலிருந்து எவ்விதமான சிக்னலும் கிடைக்கவில்லை. 

இதனிடையே இந்தியாவின் சாதனையை பறைசாற்றும் விதமாக பிரகியான் ரோவர் சக்கரத்தில் இருந்த இந்தியாவின் சின்னம் நிலவில் பதியும்படி பொறிக்கப்பட்டிருந்தது. ரோவர் நிலவில் தரையிறங்கும்போது இந்தியாவின் சின்னம் அதன் பரப்பில் பதிக்கப்படும் எனக் கூறப்பட்ட நிலையில் அது தோல்வியுற்றது. இதற்கான காரணம் என்னவென்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் விளக்கமளித்தபோது, "நிலவில் தென் துருவத்தில் ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட ரோவரின் பின் சக்கரங்களில் இந்தியாவின் தேசிய சின்னமும், இஸ்ரோவின் லோகோவும் பொறிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த முத்திரைகள் நிலவின் மேற்பரப்பில் தெளிவாகக் காண முடியவில்லை.

இதற்கு காரணம் நிலவின் மண்ணின் தன்மை பூமியில் உள்ளது போல் நிலவின் மண் தூசிகளாக அல்லாமல் மிக இறுக்கமாக உள்ளது. இதுவும் விஞ்ஞான ரீதியாக நாம் கண்டுபிடித்த ஒன்று என வைத்துக் கொள்ளலாம். இதை ஒரு நல்ல அறிகுறியாக எடுத்துக்கொண்டு, நிலவின் தென் துருவப் பகுதியிலுள்ள மண்ணின் பண்புகளைப் பற்றிய புரிதலை நமக்கு ஏற்படுத்துகிறது. இது எதிர்காலப் பயணங்களுக்கு நமக்கு உதவியாக இருக்கும்" என இஸ்ரோ தலைவர் தெரிவித்தார். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com