இந்தியாவில் பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த சென்னை!

NAMMA CHENNAI
NAMMA CHENNAI

செர்பியா நாட்டில் இயங்கி வரும் நம்பியோ என்ற நிறுவனம் உலகில் உள்ள முக்கிய நகரங்களை ஆய்வு செய்து அவற்றில் பாதுகாப்பான நகரங்கள் என்று வரையறுத்து அவற்றைப் பட்டியலிட்டு இருக்கிறது. இதில் இந்திய அளவில் சென்னை முதலிடத்தை பிடித்திருக்கிறது.

இது தொடர்பாக நம்பியோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”உலகம் முழுவதும் உள்ள நாடுகளின் முக்கிய நகரங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு அவற்றில் குற்றச்செயல்கள், பெண்களின் பாதுகாப்பு, வேலைக்கு செல்லும் பெண்களின் உடைய நிலை, குழந்தைகளுடைய பாதுகாப்பு, காவல்துறை கட்டமைப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள், முன்னெச்சரிக்கை செயல்பாடுகள், அவசர கால உதவி ஆகியவற்றை ஆய்வு செய்து உலகின் பாதுகாப்பான நகரங்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதற்காக 300-க்கும் மேற்பட்ட நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு அவற்றில் பல்வேறு விதமான ஆய்வுகள், தரவுகள் சரிபார்க்கப்பட்டு இந்த அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த அறிக்கையில் இந்தியாவில் உள்ள நகரங்களில் பாதுகாப்பான நகரங்களின் பட்டியலில் சென்னை முதலிடத்தை பிடித்திருக்கிறது. உலக அளவில் சென்னை 127 வது இடத்தை பிடித்து உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தரவுகளை அடுத்து சென்னை பெருநகர காவல் துறை தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறது. சென்னையில் பெண்கள், குழந்தைகள் என்று அனைத்து தரப்பு பொதுமக்களுடைய பாதுகாப்பையும் உறுதி செய்திருக்கின்றோம். தொடர் கண்காணிப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பல்வேறு பாதுகாப்பு குழுக்கள், கண்காணிப்பு கேமராக்கள், சைபர் குற்ற தடுப்பு பிரிவு, போக்குவரத்து பிரிவு, மதுவிலக்கு தடுப்பு பிரிவு என்று எண்ணற்ற பிரிவுகள் மூலம் சென்னை பெருநகரம் பாதுகாப்பான நகரமாக விளங்குகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com