குறைந்தது கேஸ் சிலிண்டர் விலை.. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!

காஸ் சிலிண்டர்
காஸ் சிலிண்டர்

சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, மாதத்தின் முதல் நாள் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன. இந்தியாவில், சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப வீட்டு உபயோக மற்றும் வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகின்றன.

கடந்த ஆண்டு தொடங்கிய ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததைத் தொடர்ந்து பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டர் விலை பல மடங்கு அதிகரித்தது.

பின்னர் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் மதிப்பு குறைந்ததைத் தொடர்ந்து மீண்டும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் எரிவாயு சிலிண்டரின் விலைக் குறைந்தது. இந்த நிலையில் தற்போது, வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை அதிகரித்துள்ளது. தற்போது இஸ்ரேல் - ஹமாஸ் இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக நவம்பர் மாதம் 1ஆம் தேதி சிலிண்டர் விலை உயர்ந்தது. சிலிண்டர் ஒன்றுக்கு ரூ. 101.50 ரூபாய் உயர்த்தப்பட்டு 1999.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது 15 நாட்களுக்கு பிறகு கணிசமாக குறைந்துள்ளது.

அதன் படி, சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை, 57 ரூபாய் குறைந்து 1942 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை எந்த மாற்றமுமின்றி 918.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com