இந்தியாவில் குறையும் கருத்தரிப்பு விகிதம்!

இந்தியாவில் குறையும் கருத்தரிப்பு விகிதம்!

ந்தியாவில் தற்போது முக்கிய பிரச்சினையாக கருத்தரிப்பு வீதம் குறைவு மாறி இருப்பதாக பி எல் ஓ எஸ் ஆய்வு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் பி. எல். ஓ. எஸ் ஒன் இதழியல் நிறுவனம் நடத்திய ஆய்வு முடிவின் அடிப்படையில், இந்தியாவில் கருத்தரிப்பு வீதம் குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் இந்த பிரச்சனை முக்கிய பிரச்சினையாக இருந்தும் இதன் மீது தீவிர முக்கியத்துவம் செலுத்தப்படுவதில்லை என்றும் அந்த ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஆய்விற்காக 1992 மற்றும் 2016 தேசிய குடும்ப நல ஆய்வுகளின் அறிக்கையை நன்கு தரவு செய்து இந்த முடிவு கண்டறியப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் சமூகச் சூழல், தொழில்நுட்ப வளர்ச்சியும் இந்த பாதிப்பிற்கு ஒரு காரணியாக உள்ளது. மேலும் திருமண வயது, வாழ்க்கை முறை காரணி, பாலியல் ரீதியாக ஏற்படும் பரவு நோய்கள் ஆகியவையும் மற்றும் சுற்றுச்சூழல், சமூகம், பொருளாதாரமும் கருத்தரிப்பு வீதம் குறைவதற்கு முக்கிய காரணம் ஆகும்.

இந்தியாவின் தென் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் கருத்தரிப்பு வீதம் மிக அதிக அளவில் குறைந்து வருகிறது. மேலும் அதிகமான கருக்கலைப்பு, கருக்கலைப்பு மாத்திரை உட்கொள்வது, புகைப்பிடிப்பது, மது அருந்துவதும் இனப்பெருக்க முறையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இதனால் ஆண்களை விட பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவதாகவும், இதனால் உளவியல் ரீதியாகவும், குடும்பம் மற்றும் சமூகஅழுத்தம் காரணமாகும் பெண்கள் அதிக இன்னலுக்கு உள்ளாவதாகவும் அந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு திருமணமான பெண்களில் 8 சதவீதம் பேர் முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை கருத்தரிப்பினால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், 5.8 சதவீதம் பேர் இரண்டாம் நிலை கருத்தரிப்பினால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், உலகம் முழுவதும் 8 முதல் 12 சதவீதம் பேர் கருத்தரிப்பினால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் என்று அந்த ஆய்வு முடிவுகளில் கூறப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com