காற்று மாசால் மூச்சு திணறும் தலைநகரம்.. ஊழியர்கள் WFH பார்க்க அறிவுறுத்தல்!

காற்று மாசு எதிரொலி
காற்று மாசு எதிரொலி

லைநகர் டெல்லியில் காற்றின் தரம் மோசமடைந்து வருவதால், அரசு மற்றும் தனியார் அலுவலக ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சர்வதேச அளவில் காற்று மாசு மிகுந்த தலைநகரங்கள் பட்டியலில் டெல்லி தொடர்ந்து இடம் பிடித்து வருகிறது. டெல்லியை கடந்த சில ஆண்டுகளாக காற்று மாசுபாடு ஆட்டிப் படைத்து வருகிறது. கடந்த அக்டோபர் 27ம் தேதிக்குப் பிறகு டெல்லியின் காற்று மாசு அளவு அபாயகரமாக உயர்ந்திருப்பது, தலைநகர மக்களை மூச்சுத் திணறலுக்கு உள்ளாக்கி இருக்கிறது.

டெல்லி முழுவதும் காற்று மாசுபாடு அதிகரித்து புகை மூட்டமாக காணப்படுகிறது. அதனால் அத்தியாவசிய தேவைக்கான வாகனங்களைத் தவிர மற்ற வாகனங்கள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலை பணிகள், குடிநீர் இணைப்பு பணிகள் உள்ளிட்ட பொது திட்டங்களும் தடை செய்யப்பட்டுள்ளன. தற்காலிக நடவடிக்கையாக தண்ணீர் தெளிப்பான் கருவிகள் 12 மணி நேரம் இயக்கப்படுகின்றன.

மக்கள் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதர பணியாளர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் காற்றின் தரம் நாளுக்கு நாள் மோசமடைவதால், தொடக்கப்பள்ளிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள விடுமுறை வரும் 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடைபெறும் எனவும், இதர வகுப்புகளுக்கு ஆன்லைன் வாயிலாக பாடங்களை நடத்தவும் டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com