ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் மூவர் கைது

ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் மூவர் கைது

நீண்டகாலமாக தேசிய புலனாய்வு அமைப்பினரால் (என்.ஐ.ஏ.) தேடப்பட்டு வந்த, மூன்று இஸ்லாமிக் ஸ்டேட் ஆஃப் இராக் அண்ட் சிரியா (ஐ.எஸ்.ஐ.எஸ்) பயங்கரவாதிகளை தில்லி சிறப்பு போலீஸார் கைது செய்துள்ளனர். வெளிநாட்டுசக்திகளின் ஆதரவுடன், அவர்கள் கொடுக்கும் தகவல்களின் அடிப்படையில் இந்த பயங்கரவாதிகள் வட இந்தியாவில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட திட்டமிட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடமிருந்து தாக்குதல் நடத்துவதற்கான சக்திவாய்ந்த உபகரணங்கள் மற்றும் முக்கிய ஆவணங்களையும் போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.

தேடப்பட்டுவந்த பயங்கரவாதிகளில் ஒருவரது பெயர் ஷாநவாஸ். அவரது தலைக்கு ரூ.3 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது. புனே ஐ.எஸ்.ஐ.எஸ். வழக்கில் அவர் தேடப்பட்டு வந்தார். பொறியாளரான அவர், தனது அடையாளத்தை மறைத்து தில்லியில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் மேலும் சில தகவல்களை கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த மாதம் புனே தாக்குதல் விவகாரம்  தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை ஷாநவாஸ் உள்பட நான்கு பயங்கரவாதிகளில புகைப்படங்களை வெளியிட்டிருந்தது. இவர்கள் நான்குபேர் இருப்பிடம் பற்றிய தகவல்களைத் தெரிவிப்பவர்களுக்கு தலா ரூ.3 லட்சம் பரிசு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. தகவல் அளிப்பவரின் பெயர் ரகசியமாக வைக்கப்பட்டிருக்கும் என்றும் கூறப்பட்டிருந்தது.

தொழில்முறையில் பொறியாளரான ஷாநவாஸ், புனே போலீஸ் காவலில் இருந்தபோது தப்பித்து தில்லி சென்று தலைமறைவாக இருந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். இது தொடர்பாக மேலும் சிலரை தில்லி போலீஸார் பிடித்து விசாரண நடத்தி வருகின்றனர். கடந்த ஜூலை 17- ஆம் தேதி இரவு புனே போலீஸார் ஷாநவாஸை கைது செய்தனர். புனேயில் ஒரு இடத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்றை திருடிச் செல்ல முயன்றபோது அவர் புனே போலீஸாரிடம் பிடிபட்டார்.

விசாரணையில் வெளிநாட்டு சக்திகள், ஷாநவாஸுடன் தொடர்பில் இருப்பதும், அவருடன் இன்னும் சில பயங்கராவதிகளுக்கு தொடர்பு ஏற்படுத்தி தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com