
உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரரான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவர் பில் கேட்ஸ் பெங்களூர் அஞ்சலக கிளையில் பணியாற்றும் குசுமா என்ற பெண்ணை பாராட்டி இணையதளத்தில் பதிவிட்டுள்ளார்.
உலகின் மிக முக்கிய கோடீஸ்வரர்களில் ஒருவரான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவர் பில்கேட்ஸ் கடந்த மார்ச் மாதம் இந்தியாவிற்கு வந்திருந்தார். அப்பொழுது இந்தியாவில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு சென்று அவர் சந்தித்த அனுபவங்களை தற்போது இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில் பெங்களூரில் உள்ள அஞ்சலக கிளையில் அஞ்சலராக பணியாற்றி வரும் குசுமா என்ற இளம் பெண்ணை பாராட்டி இணையதளத்தில் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் பில் கேட்ஸ் தெரிவித்து இருப்பது, இந்தியாவில் மேற்கொண்ட பயணத்தின் போது மாற்றத்திற்கான சக்தியை சந்தித்தேன். குசுமா என்ற இளம் பெண் உள்ளூர் அஞ்சல் துறையில் அதிசயங்களை செய்யும் நபராக விளங்கி வருகிறார்.
இந்தியா போன்ற மிகப் பெரிய மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டில் டிஜிட்டல் புரட்சியை மேற்கொள்வது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அதே நேரம் இந்தியா டிஜிட்டல் கட்டமைப்பை மேம்படுத்துவதில் இன்று மிக முக்கிய நாடாக விளங்கி வருகிறது.
டிஜிட்டல் சேவைகளை அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் வகையில் தனது சேவையை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக குசுமா தனது அஞ்சல் அலுவலகத்தில் டிஜிட்டல் மூலமாக நிதி சேவையை மட்டும் அளிக்காமல் நம்பிக்கையின் சேர்த்து வழங்கி வருகிறார்.
மேலும் சொல்லப்போனால் இந்தியாவின் பல்வேறு அரசு நலத்திட்டங்களை அஞ்சல் அலுவலகங்கள் மூலமாக மக்களுக்கு சென்றடைய வழிவகை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. கிராமப்புற மக்களும் எளிய முறையில் அரசின் திட்டங்களை விரைவாகவும், எளிதாகவும் பெற்று வருகின்றனர்.