இமாச்சலப் பிரதேசத்தில் தொடர்ந்து பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவின் காரணமாக மாநில முழுவதும் மிகப் பெரிய அழிவை சந்தித்திருக்கிறது. இந்த நிலையில் மாநிலத்தினுடைய மீட்பு பணிக்காக ஒன்றிய அரசின் சார்பில் 862 கோடி ரூபாய் முதல் கட்ட நிவாரண நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமாக இருக்கக்கூடிய இமாச்சலப் பிரதேசம் கனமழை நிலச்சரிவு காரணமாக முழுமையான சேதத்தை சந்தித்து இருக்கிறது. இதனால் மாநிலம் முழுவதும் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர். மேலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். இதனால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு மாநில முழுவதுமே மிகப்பெரிய இழப்பை சந்தித்து இருக்கிறது.
இந்த நிலையில் ஒன்றிய அமைச்சர் அனுராக் சிங் தாக்குர் இமாச்சலப் பபிரதேசத்தில் ஆய்வு செய்தார். அதன் தொடர்ச்சியாக மாநிலத்தினுடைய தற்போதைய நிலையை கருதி கிராமப்புற சாலை அமைப்பு திட்டத்தின் கீழ் 2700 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் மழை மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு முதல் கட்ட நிவாரண பணியை மேற்கொள்ள 862 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மக்களுக்கான வீடுகள் மற்றும் தொழிலாளர் ஆதாரத்திற்காக தேவையான நிதி ஒதுக்கவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
மேலும் இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்டிருக்க கூடிய இந்த பேரிடரின் காரணமாக மூன்று லட்சம் மக்கள் வேலை வாய்ப்பு இழந்திருப்பதாகவும், கல்வி நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் மிகப்பெரிய சேதத்திற்கு உள்ளாகி இருப்பதாகவும். மேலும் மாநிலத்தினுடைய போக்குவரத்து தேவை முற்றிலும் பாதிப்பை சந்தித்து இருப்பதாகவும் மாநிலத்தினுடைய முதல்வர் தெரிவித்துள்ளார்.
சாலைகள் முழுவதும் சேதம் அடைந்து இருப்பதால் மீட்பு பணியை செய்வதில் தொடர்ந்து கால தாமதம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் மாநிலம் முழுவதும் முதல் கெட்ட இயல்பு நிலைக்கு திரும்புவதற்கே பல மாத காலம் எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.