புற்றுநோய்க்கான போலி மருந்துகள் இந்தியாவில் அதிகம் விற்பனை !

புற்றுநோய்க்கான போலி மருந்துகள் இந்தியாவில் அதிகம் விற்பனை !

புற்றுநோய் மற்றும் கல்லீரல் பாதிப்புக்கு உபயோகிக்கப்படும் மருந்துகளில் போலி மருந்துகள் அதிகம் கலந்து இருப்பதாக இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் தெரிவித்துள்ளது.

புற்றுநோய் பாதிப்பு உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. கல்லீரல் பாதிப்பும் உலகை அச்சுறுத்தும் முக்கிய நோய்களில் ஒன்றாக உள்ளது. இந்த இரண்டு நோய்களும் மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் அபாயம் வாய்ந்த நோய்களாக இருக்கின்றன. இதனால் இந்த நோய்க்கா அளிக்கப்படும் சிகிச்சை என்பதும் அதிக முக்கியத்துவம் கொண்டது. அதே நேரம் தற்போது இந்த நோய் பாதிப்பு அதிகரித்து வருவதால் சில மோசடி நிறுவனங்கள் புற்றுநோய் மற்றும் கல்லீரல் பாதிப்புக்கு போலி மருந்துகளை உற்பத்தி செய்து மக்களிடம் புழக்கத்தில் விட்டுள்ளனர். இதன் மூலம் அதிக அளவில் லாபமிட்ட முயற்சிக்கின்றனர்.

இதுகுறித்து இந்திய அரசின் இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் தற்போது அனைத்து மாநில அரசுகளுக்கும் அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது. இந்த அறிவிப்பில் புற்றுநோய் மற்றும் கல்லீரல் பாதிப்பிற்கு பயன்படுத்தப்படும் ஊசி மருந்துகளில் போலி மருந்துகள் தற்போது இந்தியாவில் அதிகம் புழக்கத்தில் விடப்பட்டிருக்கின்றன. குறிப்பாக போலி மருந்துகள் லண்டன் மற்றும் அயர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் பேக்கிங் செய்யப்பட்டு இந்தியாவில் விநியோகிக்கப்படுவது கண்டறியப்பட்டிருக்கிறது. குறிப்பாக புற்று நோய்க்கு பயன்படுத்தப்படும் அட்செட்ரிஸ் ஊசி மருந்து மற்றும் கல்லீரல் நோய் பாதிப்பிற்கு பயன்படுத்தப்படும் டிஃபைடெலியோ ஆகிய மருந்துகளில் அதிகமான போலி மருந்துகள் கலக்கப்பட்டுள்ளன. எனவே மாநில அரசுகள் விழிப்புடன் மருந்துகளை கண்காணிக்க வேண்டும் என்றும்.

குறிப்பிட்ட மருந்துகளின் பெட்டிகளில் இருக்கக்கூடிய ஒரு மருந்தை சோதனை செய்து உண்மை தன்மையை கண்டறிய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. மேலும் மருத்துவர்களும் குறிப்பிட்ட வகை மருந்துகளை பரிந்துரை செய்யும் பொழுது மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com