தென்னாப்பிரிக்காவில் ஐந்து மாடி கட்டிடத்தில் தீ விபத்து: 73 பேர் பலி!

தென்னாப்பிரிக்காவில் ஐந்து மாடி கட்டிடத்தில் தீ விபத்து: 73 பேர் பலி!
Editor 1

தென்னாப்பிரிக்காவில் ஜோஹன்னஸ்பர்க் நகரில் ஐந்து மாடி கட்டிடம் ஒன்றில் வியாழக்கிழமை ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் 73 பேர் உயிரிழந்தனர். மேலும் தீவிபத்தில் காயமடைந்து, புகைமண்டலத்தில் மூச்சுவிடமுடியாமல் தவித்த 52-க்கும் மேலானவர்கள் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இத்தகவலை அவசர சேவை நிர்வாக அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ராபர் முலாவ்டிஸி தெரிவித்தார். கொழுந்துவிட்டு எரிந்த தீயில் உயிரிழந்தவர்களில் 7 குழந்தைகளும் அடங்குவர். சமீபகாலங்களில் உலகில் நடந்துள்ள மிக துயரமான தீவிபத்து சம்பவங்களில் இதுவும் ஒன்றாகும்.

தீவித்து பற்றி தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினர் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மீட்புப் பணிகளும் முழுவீச்சில் நடத்து வருகிறது. போலீஸார் அந்த இடத்தை சுற்றிவளைத்துள்ளனர் என்றும் ராபர்ட் முலாவ்டிஸி குறிப்பிட்டார்.நாங்கள் ஒவ்வொரு தளமாகச் சென்று இறந்தவர்களின் உடலை மீட்டு வருகிறோம் என்று அவர் கூறினார்.ஜோஹன்னஸ்பர்க் நகர மக்களுக்கு இது ஒரு துயரமான நாள். நான் இருபது வருடங்களாக அவசர சேவைப் பணியில் இருக்கிறேன். இதுவரை இப்படி ஒரு சம்பவத்தை பார்த்ததில்லை என்றார் முலாவ்டிஸி.

அந்த ஐந்து மாடி கட்டிடத்தில் நள்ளிரவு தீவிபத்து ஏற்பட்டுள்ளது. எனினும் தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. அந்த கட்டிடத்தில் பயன்படுத்தப்பட்ட எரியும் மெழுகுவர்த்தியால் தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று உள்ளூர்  அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அந்த கட்டிட்டம் ஒரு காலத்தில் தென்னாப்பிரிக்காவின் பொருளாதார கேந்திரமான பகுதியில் அமைந்திருந்தது. ஆனால், இப்போது அங்கு யாரும் போவது இல்லை. சிலர் சட்டவிரோதமாக அந்த கட்டிடத்தில் தங்கியிருந்திருக்கலாம் என்று ராபர்ட் முலாவ்டிஸி தெரிவித்தார்.

அந்த கட்டிடத்தினுள் பாதுகாப்புக்காக ஒரு கதவு உள்ளது. அது மூடியிருந்ததால் மக்கள் யாரும் வெளியேற முடியவில்லை என்று உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அந்த இடத்தில் சிலர் சட்டவிரோதமாக குடியிருந்ததாகவும், அவர்களிடமிருந்து கிரிமினல்கள் சிலர் வாடகை வசூலித்து வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த கட்டிடத்தின் உள்ளே 80 குடில்கள் அமைக்கப்பட்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்கள் பயன்படுத்தப்பட்டதாலேயே அந்த கட்டிடத்தில் தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் முலாவ்டிஸி மேலும் கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com