வருங்கால முதல்வர் உதயநிதி ஸ்டாலின்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு!
வருங்கால முதல்வர் உதயநிதி ஸ்டாலின்தான் என்று தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.
திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருச்சிக்கு வந்திருந்தார். அந்த நிலையில் திருச்சி சிங்காரத்தோர் பகுதியில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரியில் 100 ஆண்டு விளையாட்டு தின விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கே என் நேரு, மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோரம் உதயநிதி ஸ்டாலினுடன் பங்கேற்றனர்.அப்போது அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், 100 ஆண்டு விளையாட்டு தின விழா நிகழ்ச்சிக்கு சரியான சிறப்பு விருந்தினரை தேர்வு செய்துள்ளீர்கள். நேற்று உதயநிதி ஸ்டாலின் நீட் தேர்வு போராட்டத்தில் ஆற்றிய உரை வரலாற்று சிறப்புமிக்கது. மனிதர்கள் தெய்வங்கள் ஆகலாம், மற்றவர்களுக்கு உழைப்பவர்கள் தலைவனாகலாம் என்ற சொல்லுக்கு உதாரணமாக செயல்படுபவர் உதயநிதி.
நேற்று எங்கள் செயலாளராக இருந்தார், இன்று தலைவராக வழி நடத்துகிறார். மேலும் விளையாட்டு துறையின் பல்வேறு சிறப்பு திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். சேவை பணியில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்ட போராளியாக விளங்குகிறார். விளையாட்டுத் துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். முன்பு எப்போதும் இல்லாத வழியில் விளையாட்டுத்துறை பல்வேறு கட்ட வளர்ச்சி அடைந்திருக்கிறது. இளைஞர் நல திட்டங்களையும் ஆக்கப்பூர்வமாக முன்னெடுத்து வருகிறார்.
பெண்கள் அதிக தன்னம்பிக்கையோடு செயல்பட வேண்டும். ஒலிம்பிக் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகளே அதிகம் போட்டியிடுகின்றனர். கலைஞர் உருவாக்கிய துறையை அவரது பேரன் வளர்த்து வருகிறார்.
உதயநிதி ஸ்டாலின் உழைப்பாளி போராளி மட்டுமல்ல வருங்கால முதல்வரும் கூட. நிகழ்ச்சிக்கு எதிரே மைதானம் இப்படி காலியாக இருக்கிறதோ அதேபோல உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரியே இல்லை என்ற நிலை உருவாகி இருக்கிறது.