ஜி20 மாநாடு: உலகத் தலைவர்கள் வருகை : உச்சக்கட்ட பாதுகாப்பில் டெல்லி!

G20
G20

ஜி-20 மாநாட்டிற்காக உச்சகட்ட பாதுகாப்பு வளையத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது தலைநகர் டெல்லி.

உலகின் மிக முக்கிய நாடுகளாக கருதப்படும் 20 நாடுகளுடைய கூட்டமைப்பு ஜி 20 என்று அழைக்கப்படுகிறது. இதனுடைய கூட்டம் உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று இருக்கிறது. இந்த நிலையில் வரக்கூடிய செப்டம்பர் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் ஜி 20 மாநாடு இந்தியாவின் தலைநகர் டெல்லியில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

இதற்காக ஜி 20 நாடுகளுடைய தலைவர்கள், பிரதிநிதிகள், அதிகாரிகள், பாதுகாப்பு படையினர், ஊடகத்தினர் என்று பலரும் டெல்லிக்கு வர உள்ளனர்.

உலக நாடுகளுடைய தலைவர்கள் டெல்லிக்கு வரை இருப்பதால் டெல்லி முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு பணி செய்யப்பட்டிருக்கிறது. குறிப்பாக ஒரு லட்சத்து 30 ஆயிரம் போலீசார் மற்றும் ராணுவத்தினர் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்தியாவின் ஒட்டுமொத்த பாதுகாப்பு துறையும் டெல்லியின் அனைத்து செயல்பாடுகளையும் தீவிரமாக கண்காணித்து வருகிறது.

மேலும் உயர்தர ஆயுதங்கள், கண்காணிப்பு கருவிகள், சிசிடிவி கேமராக்கள், ஏவுகணை வழி மறைத்து தாக்கக்கூடிய ஆயுதங்கள் ட்ரோன்களை தாக்கி அளிக்கும் ஆயுதங்கள் ஆகியவை டெல்லியின் பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டிருக்கிறது. மேலும் 500 தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றன.

அதுமட்டுமல்ல அது செப்டம்பர் 8, 9 ஆகிய நாட்களில் டெல்லிக்கு வரும் 110 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. மேலும் ரயில் சேவை, போக்குவரத்து சேவை பெருமளவில் தடை செய்யப்பட்டிருக்கிறது. அதே சமயம் மாநாடு நடக்கும் இரண்டு நாட்களும் பள்ளி கல்லூரிகள் உட்பட அனைத்து துறை அலுவலகங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது.

எந்தவித பொது பொது நிகழ்ச்சிகளோ, போராட்டங்களளோ ஆகிய நாட்களில் நடத்த தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்காக மெட்ரோ சேவை டெல்லியில் இரண்டு நாட்களுக்கு மட்டும் 4 மணிக்கே தொடங்க திட்டமிடப்பட்டிருக்கிறது.

மேலும் உலகத் தலைவர்கள் பயன்படுத்துவதற்காக 20 குண்டு தொலைக்காத அதிநவீன வாகனங்கள் தற்காலிகமாக வாங்கப்பட்டிருக்கிறது. மேலும் ஜி 20 மாநாடு நடைபெறும் பாரத் மண்டபத்தை சுற்றிலும் பொதுமக்கள் நடமாட தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் டெல்லியில் இருக்கக்கூடிய சுற்றுலாத் தலங்களுக்கு வெளிநாட்டில் இருந்து வந்திருக்கக்கூடிய பிரதிநிதிகள் செல்வதற்கு ஏதுவாக பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இது மட்டுமல்லாது டெல்லி நகர் முழுவதும் இந்தியாவினுடைய கலை, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில் ஓவியங்கள், சிலைகள், புகைப்படங்கள் ஆகியவை அமைக்கப்பட்டு ஒட்டுமொத்த டெல்லியும் உச்சகட்ட பாதுகாப்பு வளையத்திற்கு கொண்டுவரப்பட்டு திருவிழா கோளம் கொண்டிருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com