ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் பெருமை சேர்க்கும் விதமாக சந்திரயான் 3 விண்கலம் நிலவின் தென் துருவபகுதியில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் இணைந்து இந்த வெற்றியை உலக நாடுகள் கொண்டாடிவருகிறது. இந்நிலையில் கூகுள் வலைத்தளம் தன்னுடைய முகப்பு பக்கத்தில் சந்திரயான் 3 விண்கலம் நிலவின் தென்துருவ பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கியது குறிக்கும் வகையில் சிறப்பு டூடுளை வெளியிட்டுள்ளது.
கூகுள் வெளியிட்டுள்ள அந்த சிறப்பு டூடுளில் சந்திரயான் 3 விண்கலம் நிலவை சுற்றிவருவதுபோலவும் அதன்பின்னர் நிலவின் தென்துருவ பகுதியில் விக்ரம் லேண்டார் தரையிறங்குவதும் போலவும் உள்ளது. இறுதியாக நிலவில் தரையிறங்கிய பின்னர் பூமி பந்தில் இந்தியா வரைப்படம் இருக்கும் இடத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் கூகுள் சிறப்பு டூடுளை வெளியிட்டுள்ளது. சந்திரயான் 3ன் வெற்றியை உலகம் முழுவதும் கொண்டுச் செல்லும்வகையில் இந்த டூடுள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நிலவில் முந்தைய சோவியத் ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தப்படியாக Soft Landing முறையில் விண்கலத்தை தரையிறக்கிய நான்காவது நாடு என்ற பெருமையும், அதேபோல் நிலவின் தென்துருவத்தில் முதல் முறையாக கால்தடம் பதித்த முதல் நாடு என்ற வரலாற்று சிறப்புமிக்க சாதனையை இந்தியா நிகழ்த்திகாட்டியுள்ளது.