சிம் கார்டு விற்பனை செய்யும் டீலர்களுக்கு கட்டுப்பாடு அதிகரிப்பு!

சிம் கார்டு விற்பனை செய்யும் டீலர்களுக்கு கட்டுப்பாடு அதிகரிப்பு!

சைபர் குற்றங்களை தடுக்க சிம் கார்டு விற்பனை செய்யும் டீலர்களுக்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தி உள்ளது தொலைத்தொடர்புத் துறை அமைச்சகம்.

சமீபகாலமாக சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இவற்றை தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக சைபர் குற்றங்கள் நடைபெறுவதற்கு முக்கிய காரணமாக செல்போன் எண்கள் பயன்படுத்தப்படுகின்றன, அவ்வாறான செல்போன் எண்களில் இருந்து வரும் போலி அழைப்புகள், போலி இணைப்புகள் பெரும்பான்மையான குற்றத்திற்கு காரணங்களாக இருக்கின்றன. இதை அடுத்து சிம் கார்டுகளுக்கான நடைமுறையை மாற்றி தொலைதொடர்புத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் நேற்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அமைச்சர் கூறியது, சைபர் குற்றங்கள் மற்றும் முறைகேடுகளை சரி செய்ய அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக சஞ்சார் செயலி அறிமுகப்படுத்தப்பட்டு சிம்கார்டுகள் உடைய நடைமுறைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மேலும் 52 லட்சம் போலி சிம் கார்டுகள் கண்டறியப்பட்டு அவற்றினுடைய இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மேலும் தற்போது சிம் கார்டு டீலர்களுக்கான நடைமுறைகள் கடுமையாக்கி உள்ளது. நாடு முழுவதும் பத்து லட்சம் சிம்காட் டீலர்கள் உள்ளனர்.

அவர்கள் அனைவரிடமும் காவல்துறை சரிபார்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. போலீஸ் வெரிஃபிகேஷன் மூலம் டீலர்களினுடைய உண்மை தன்மை அரசு அறிய உள்ளது. இதன் மூலம் சட்ட விரோத சிம் கார்டு விற்பனை தடை செய்யப்படும்.

மேலும் புகாருக்கு உள்ளான போல இணைப்புகள் உடனடியாக நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  குற்றச் செயலில் ஈடுபடும் போலி இணைப்புகளை விற்பனை செய்தவர்களை கண்டறிந்து  நடவடிக்கை எடுக்கும் வகையிலும் சட்டம் அமைக்கப்பட உள்ளது.

குற்றங்களை தடுக்கும் வகையில் மொத்தமாக சிம் கார்டு விற்பனை செய்யும் நடைமுறை நீக்கப்பட்டு இருக்கிறது. மேலும் தவறிழைக்கும் சிம் கார்டு டீலர்கள் மீது சிறை தண்டனை அல்லது 10 லட்சம் அபராதம் அல்லது இரண்டு சேர்த்து விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com