2 அமெரிக்க பிணையாளிகளை விடுவித்த ஹமாஸ்...தரைவழி தாக்குதலை நிறுத்த பைடன் வலியுறுத்தல்!

விடுவிக்கப்பட்ட இரண்டு அமெரிக்க பெண்கள்
விடுவிக்கப்பட்ட இரண்டு அமெரிக்க பெண்கள்

மாஸ் தீவிரவாதிகளால் காசா பகுதியில் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களில் இரண்டு அமெரிக்கர்கள் வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டனர். மேலும் பிணைக் கைதிகள் விடுவிக்கப்படலாம் என்றும் தீவிரவாதிகள் குறிப்பாக உணர்த்தியுள்ளனர்.

ஜூடித் டாய் ரானன் மற்றும் அவரது இளம் வயது மகள் நாடாலி ஷோஷனா ரான்ன் இருவரும் விடுவிக்கப்பட்டனர். காசா எல்லையிலிருந்து அவர்கள் இஸ்ரேல் தூதுவர் மூலம் ராணுவ தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் அமெரிக்க பிணைக் கைதிகள் இருவர் விடுவிக்கப்பட்டதை உறுதிசெய்துள்ளார். அவர்கள் இருவரும் முழுமையாக மீட்க இஸ்ரேல் அரசின் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த 7 ஆம் தேதி நடத்திய கொடூரத் தாக்குதலின்போது பிணைக் கைதிகாளாக பிடிக்கப்பட்டவர்களில் 2 அமெரிக்கர்கள் இப்போது விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த 15 நாட்களாக பிணைக் கைதிகள் சொல்லொணா துயரத்தை அனுபவித்தனர். அவர்கள் விரைவில் குடும்பத்துடன் இணைவார்கள் என்றும் பைடன் தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் தீவிரவாதிகள் பிடித்துவைத்துள்ள 200 பேரில், 2 பேர் இப்போது விடுக்கப்பட்டுள்ளனர். சிவிலியன்களை விடுவிப்பது குறித்து கத்தார் மற்றும் எகிப்துடன் பேசி வருகிறோம். விரைவில் மேலும் பிணைக் கைதிகள் விடுவிக்கப்படலாம் என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது.

ஹமாஸ் தீவிரவாதிகளால் விடுவிக்கப்பட்ட இரண்டு அமெரிக்கர்களும் இஸ்ரேல் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும். விரைவில் அவர்கள் தங்கள் குடும்பத்துடன் இணைவார்கள். ஆனால், ஹமாஸ் பிடியில் மேலும் 10 அமெரிக்கர்கள் உள்ளனர். அவர்களும் மீட்கப்பட வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் தெரிவித்தார்.

ஹமாஸ் தீவிரவாதிகள் பிடித்துவைத்துள்ள 200 பேரில், 2 பேர் இப்போது விடுக்கப்பட்டுள்ளனர். சிவிலியன்களை விடுவிப்பது குறித்து கத்தார் மற்றும் எகிப்துடன் பேசி வருகிறோம். விரைவில் மேலும் பிணைக் கைதிகள் விடுவிக்கப்படலாம் என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது.

காசாவில் 200-க்கும் மேலானவர்கள் பிணைக்கைதிகளாக ஹமாஸ் தீவிரவாதிகளால் பிடித்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள், சிறுமிகளும் அடங்குவர். இவர்கள் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள். அனைவரும் பத்திரமாக விடுவிக்கப்பட வேண்டும் என்பதுதான் எங்களது விருப்பமாகும் என்றும் பிளிங்கன் கூறினார்.

ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தரைவழித் தாக்குதலுக்கு தயாராகி வருகிறது. எனினும் பிணைக் கைதிகள் விவகாரம் சவாலாக இருப்பதால் இன்னும் தரைவழி தாக்குதலை இஸ்ரேல் தொடரவில்லை. இதனிடையே பிணைக் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்படும் வரை தரைவழித் தாக்குதல் நடத்த வேண்டாம் என இஸ்ரேல் ராணுவத்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய அதிரடி ஏவுகணை மற்றும் தரை வழித்தாக்குதலில் இஸ்ரேலியர்கள் 1400 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து ஹமாஸ் தீவிரவாதிகள் மீது இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தியது. காசா நகரம் மீது இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் குண்டு மழை பொழிந்தனர். ஏவுகணை தாக்குதலும் நடத்தப்பட்டது. இதில் பலமாடி கட்டிடங்கள் தரைமட்டமானது. பெண்கள், குழந்தைகள் என 4,000 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 13,000 பேர் காயமடைந்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com