அதிவேக பயணத்தின் போது வீலிங் செய்ய முற்பட்டு கை கால்களில் முறிவு ஏற்பட்ட யூட்யூபர் டிடிஎஃப் வாசன் மீது வழக்கு பதிவு.
டிடிஎஃப் வாசன் என்பவர் அதிவேகமாக பைக் ஒட்டி அதை யூடியூபில் பதிவு செய்து பிரபலமானவர். விலை உயர்ந்த பைக்குகளில் அதிவேகமாக சென்று சாகசம் செய்து அதிக அளவிலான ரசிகர்களை கவர்ந்து வைத்துள்ளார். இன்றைய இளைஞர்களிடம் இருக்கும் பைக் மோகம், டிடிஎஃப் வாசனை இளைஞர்களிடம் பெரிதும் கொண்டு சென்று இருக்கிறது.
அதே சமயம் டிடிஎஃப் வாசன் இளைஞர்களுக்கான தவறான முன்னுதாரணமாக இருக்கிறார். ஆபத்தை விளைவிக்கக் கூடிய வகையில் வாகனங்களை இயக்குகிறார் என்ற குற்றச்சாட்டுகளும் டிடிஎஃப் வாசன் மீது உள்ளது. மேலும் ஆபத்தை விளைவிக்கக் கூடிய வகையில் வாகனம் ஓட்டியதாக டிடிஎஃப் வாசன் மீது ஏற்கனவே பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் டிடிஎஃப் வாசன் தமிழ்நாட்டில் இருந்து மகாராஷ்டிரா வரை பைக் பயணம் மேற்கொள்ள போவதாக அறிவித்திருந்தார். இதற்காக காஞ்சிபுரத்திலிருந்து சென்னை பெங்களூர் நெடுஞ்சாலையில் பயணம் செய்து கொண்டிருந்த வாசனைப் பார்க்க ஆங்காங்கே அவருடைய ரசிகர்கள் இருந்தனர். அப்போது அதிவேகமாக சென்று வீலிங் செய்ய முயற்சித்தார். அதில் ஏற்பட்ட விதத்தில் விபத்தில் கை கால்களில் முறிவு ஏற்பட்டு காரப்பேட்டை உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மேலும் அஜித் என்ற எனது நண்பருடன் போட்டிக்கொண்டு வாகனம் ஓட்டி வீலிங் செய்ய முயற்சித்த போது தான் விபத்து ஏற்பட்டது என்று தெரியவந்து. இதை எடுத்து பாலு செட்டி சத்திரம் காவல் துறையினர் வாசன் மீது ஐபிசி 279 மற்றும் ஐபிசி 338 ஆகிய இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அதிவேக பயணம் என்றாலே ஆபத்து என்று நிலையில் டிடிஎஃப் வாசன் போன்றவர்கள் இதையே தங்கள் தொழிலாக மாற்றிக் கொண்டு விலை உயர்ந்த வாகனங்களை வாங்கி அதி வேகமாக பயணித்து அதை வீடியோவாக பதிவு செய்து பதிவு செய்து சம்பாதித்து வருகின்றனர். இதைப் பார்த்து இளைஞர்கள் பலரும் விலை உயர்ந்த வாகனங்களை வாங்க ஆசைப்படுவதோடு, அதிவேகமாக செல்ல முயற்சிக்கின்றனர். இதுபோன்ற செயல்களே இன்று சாலை விபத்துக்கள் அதிகம் நடக்க முக்கிய காரணங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது என்று பொதுமக்கள் பலரும் குற்றம் சாட்டுகின்றனர்.