சந்திரயான் 3 அரிய நிகழ்வை நேரலையில் பார்க்கனுமா? இந்த லிங்கை க்ளிக் செய்தால் போதும்!

CHANDRAYAN 3
CHANDRAYAN 3

லகமே ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் சந்திரயான்-3 விண்கலம் இன்று மாலை 6.04 மணிக்கு நிலவில் தரையிறக்கப்படுகிறது.

நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக கடந்த ஜூலை 14ஆம் தேதி சந்திரயான் -3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. 35 நாட்களாக புவி வட்டப்பாதை மற்றும் நிலவின் சுற்றுப்பாதைகளை நிறைவு செய்த விண்கலத்தில் இருந்து, வியாழன் பகல் ஒரு மணியளவில் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக பிரிந்தது.

இந்நிலையில், De-Boosting முறையில் விக்ரம் லேண்டரின் சுற்றுவட்டப் பாதையின் உயரத்தை இஸ்ரோ மேலும் குறைத்தது.விக்ரம் லேண்டர் திட்டமிட்டபடி இன்று மாலை 6.04 மணியளவில் நிலவில் தரையிறங்கும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக இஸ்ரோ தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், விக்ரம் லேண்டரில் உள்ள தொகுப்புகள் வழக்கமான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளதாகவும், நிலவில் லேண்டரை தரையிறக்கும் நடவடிக்கைகள் சரியாக சென்று கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அழகிய தருணத்தை இஸ்ரோ லைவ் டெலிகாஸ்ட் செய்கிறது. இதனை நேரலையில் காண விரும்புவோர், இஸ்ரோ இணையதளமான

ISRO Website - https://isro.gov.in , https://isro.gov.in

Facebook  https://facebook.com/ISRO 

YouTube https://youtube.com/live/DLA_64yz8Ss?feature=share ஆகிய தளங்கள் மூலம் இந்தியாவின் இந்த பெரும் சாதனையை கண்டு ரசிக்கலாம்.

மேலும், DD National TV சேனலிலும் 17:27 Hrs. IST பார்க்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com